
ஏதோ அழகிற்காக தமிழன் கட்டிவைத்தான் என நினைத்தீர்களா?
இல்லை இல்லை ....
நவீன வெள்ள அபாய எச்சரிக்கையின் ஒலிப்பானாக...
அந்தக் காலத்திலேயே தாமிரபரணியின் நடுவே அறிவியல் பூர்வமாக வெள்ள அபாயத்தை முன்கூட்டியே அறிவிக்கும் சங்குகல் மண்டபத்தை கட்டிவைத்தனர்.
தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்டவாறும் கட்டப்பட்டு அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில் சங்குபோன்ற அமைப்புடன் கட்டி வைத்தனர்.
ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள்ளாக தடுப்புச்சுவருக்கு மேலாக உயரும்போது அளவுக்குமேல் வெள்ளம் உயர்ந்ததால் வெள்ளத்தின் சத்தத்தால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்பட்டு சங்குசத்தம் மக்களை சென்றடையும்....
இதனை வெள்ள அபாய அறிவிப்பாக மக்கள் அறிந்து, முன்கூட்டியே மேடான இடங்களுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வர்.
பின்பு வெள்ளம் வடிகின்ற போது மீண்டும் சங்கு சத்தத்தை எழுப்பும்போது வெள்ளப் பெருக்கு குறைந்ததை அறிந்து மக்கள் தங்கள் இருப்பிடம் வந்தடைவர்.
முன்னோரை துதிப்போம்..



No comments:
Post a Comment