JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு, அரசு உதவிபெறும் கிராமப்புற பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவிகள் இடைநிற்றலின்றி பயில ஊக்கத்தொகை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், மாவட்டக் கல்வி அலுவலர்களை தொடர்பு அலுவலர்களாக நியமனம் செய்து, விடுபட்ட விவரங்களை எமிஸ் தளத்தில் வரும் 10-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, எமிஸ் தளத்தில் உள்ள விவரங்களின் அடிப்படையில் 13,304 மாணவிகளுக்கு ஆதார் விவரம், 60,349 மாணவிகளுக்கு வங்கிக் கணக்கு எண், 45,498 மாணவிகளுக்கு ஆண்டு வருமானம் விவரங்களை எமிஸ் தளத்தில் துரிதமாக பதிவுசெய்ய வேண்டும்.
No comments:
Post a Comment