Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 26, 2025

கணித ஆசிரியை - மாணவிக்கு பேனா பரிசளித்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்


உருக்கமாக பேசிய மாணவி.. உடனே அழைத்து முதல்வர் தந்த கிப்ட்

புதுமை திட்டம் மூலம் தனக்கு மாதாமாதம் வரும் ரூ.1000 தான் கல்விச் செலவுகளைச் சமாளிக்க உதவுவதாகக் கூறிய மாணவி, தனது நெகிழ்ச்சியான பயணத்தைக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். இதைக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், அப்போதே மாணவியை அழைத்து அவருக்கு ஒரு பரிசு கொடுத்தார்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் திட்டங்கள் மூலம் தாங்கள் எந்தளவுக்குப் பயன் பெற்றுள்ளனர் என்பது குறித்து விளக்கிப் பேசினர்.

என்னுடைய பெயர் சுப்புலட்சுமி, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் படிக்கிறேன். நான் பிளஸ் 2 முடித்த பிறகு படிக்க வேண்டும் என்று அப்பா, அம்மாவிடம் சென்று கேட்டேன். பொட்டப்பிள்ளையெல்லாம் எதற்கு படிக்க வேண்டும். படிக்கெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டனர். எப்படியாவது படிக்க வேண்டும் என்று கூறி மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்தேன். விண்ணப்பம் போடுவதற்கு கடைசிநாள் வரை பணம் இல்லை. அதனால் வேலைக்கு சென்று அந்த பணத்தை வைத்து விண்ணப்பித்தேன். என்னுடைய அப்பா ஆடு மேய்க்கும் விவசாயி தான். என்னுடைய அம்மா கூலி வேலை செய்பவர்கள் தான். படிக்க வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியவில்லை.

மேலும் கல்லூரியில் எனக்கு படிப்பதற்கு இடம் கிடைத்தது, ஆனாலும் கல்லூரியில் சேர்த்து விடுவதற்கு யாரும் வரவில்லை.

அதன்பிறகு அடம் பிடித்ததால் கல்லூயில் சேர்த்து விட்டனர். அப்போது கல்லூரியில் சேருவதற்கு பணம் இல்லாத நிலையில் அங்கு பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் எனக்கு பணம் கொடுத்து உதவி செய்தனர். பின்னர் எனக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் எனக்கு வந்த பணத்தை அந்த ஆசிரியரிடம் கொடுத்தேன் வாங்க மறுத்துவிட்டார். ஆனாலும் வற்புறுத்தி அவரிடம் கொடுத்தேன். மேலும் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் வரும் பணத்தின் மூலம் நோட், தேர்வு கட்டணத்தை நானே செலுத்துக் கொள்கிறேன். அதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் கணிதவியல் துறை எடுத்து படிக்கிறேன், ஆசிரியராக வேண்டும் என்பது தான் என்னுடைய மிகப்பெரிய ஆசையே.

நான் கல்லூரியில் சேர்ந்தபோதும் என்னால் கல்லூரி கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. அப்போது கல்லூரியில் வேலை செய்த ஒருவரே கட்டணம் செலுத்தவும் எனக்கு உதவினார். புதுமைப் பெண் திட்டம் மூலம் எனக்குக் கிடைத்த பணத்தை வைத்து நான் அவருக்குத் திரும்பப் பணத்தைக் கொடுக்கப் போனேன். ஆனாலும், அவர் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். இருப்பினும் அதையும் தாண்டி அவருக்குக் கொடுத்துவிட்டு வந்தேன்.

எனக்கு இப்போது திருமணமாகிவிட்டது. ஆனாலும். புதுமைப் பெண் திட்டம் இருப்பதால் மாதாமாதம் வரும் ரூ.1000 திட்டத்தைச் சேர்த்து வைத்துப் படிப்புக்குத் தேவையானவற்றை, தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த முடிகிறது. படிப்புச் செலவுகளைச் சமாளிக்க இது உதவுகிறது. புத்தகம் வாங்க யாரிடமும் கையேந்தி நிற்கத் தேவையில்லை. இதனால் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் கொடுத்த கிப்ட்


நான் கணிதம் துறையைத் தேர்வு செய்துள்ளேன். எனக்குக் கணித ஆசிரியர் ஆக வேண்டும் என்பதே ஆசை. இப்போது யுஜி படிப்பிற்கு மட்டுமே புதுமைப் பெண் திட்டம் வழங்கப்படுகிறது. யுஜி படிப்போருக்கும் புதுமைப் பெண் திட்டத்தை வழங்க வேண்டும் என்பதைக் கோரிக்கையாக வைக்கிறேன்" என்றார். இதைக் கேட்டதும் முதல்வர் ஸ்டாலின் அந்த மாணவியை அழைத்து கிப்ட் ஒன்றைக் கொடுத்தார். மேலும், கணித ஆசிரியர் ஆக வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். அருகே இருந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் அந்தப் பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment