Sunday, September 7, 2025

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

சித்​தா, ஆயுர்​வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்​பு​களுக்​கான தரவரிசை பட்​டியலை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வெளி​யிட்​டார். கன்​னி​யாகுமரி மாவட்ட மாணவி தரவரிசை பட்​டியலில் முதலிடம் பிடித்​துள்​ளார். இந்​திய மருத்​து​வம் மற்​றும் ஹோமியோபதி துறை​யின்​கீழ் அரும்​பாக்​கம் அறிஞர் அண்ணா அரசு இந்​திய மருத்​து​வமனை வளாகத்​தில் சித்த மருத்​து​வக் கல்​லூரி, யுனானி மருத்​து​வக் கல்​லூரி செயல்​படு​கின்​றன.

அதே​போல், திருநெல்​வேலி மாவட்​டம் பாளை​யங்​கோட்​டை​யில் சித்த மருத்​து​வக் கல்​லூரி, மதுரை மாவட்​டம் திரு​மங்​கலத்​தில் ஹோமியோபதி மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் கன்​னி​யாகுமரி மாவட்​டம் நாகர்​கோ​வில் அருகே கோட்​டாறில் ஆயுர்​வேத மருத்துவக் கல்​லூரி உள்​ளன.

இந்த 5 அரசு கல்​லூரி​களில் உள்ள 320 இடங்​களில், அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு 48 இடங்​கள் ஒதுக்​கப்​படு​கின்​றன. மீத​முள்ள 272 இடங்​கள் மாநில அரசுக்கு உள்​ளது. இவைத​விர 29 தனி​யார் கல்​லூரி​களில் 1,920 இடங்​கள் உள்​ளன. அதில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்​கீட்​டுக்கு வழங்​கப்​படு​கிறது. மீத​முள்ள இடங்​களில் 65 சதவீதம் மாநில அரசுக்​கும், 35 சதவீதம் நிர்​வாக ஒதுக்கீட்டுக்கும் உள்​ளன.

நீட் தேர்​வில் தேர்ச்சி பெற்​றவர்​களுக்கு அரசு ஒதுக்​கீடு இடங்​கள், நிர்​வாக ஒதுக்​கீடு இடங்​கள் மற்​றும் தனி​யார் கல்​லூரி​களின் அகில இந்​திய ஒதுக்​கீடு இடங்​களுக்கு மாநில அரசு கலந்​தாய்வு நடத்தி வரு​கிறது. அரசு கல்​லூரி​களின் அகில இந்​திய ஒதுக்கீட்டுக்​கான 15 சதவீத இடங்​களுக்கு மட்​டும் மத்​திய அரசு கலந்​தாய்வு நடத்​துகிறது.

இந்​நிலை​யில் நேற்று சென்னை கிண்​டி​யில் உள்ள கலைஞர் நூற்​றாண்டு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் தகு​தி​யானவர்​களின் தரவரிசை பட்​டியல்​களை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வெளி​யிட்​டார். துறை செயலர் ப.செந்​தில்​கு​மார், இந்​திய மருத்​து​வம் மற்​றும் ஹோமியோபதி துறை ஆணை​யர் விஜயலட்​சுமி, இணை இயக்​குநர் மணவாளன், தேர்​வுக்​குழு செயலர்கரோலின், எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழகத்​தின் துணை வேந்​தர் நாராயண​சாமி உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

தரவரிசை பட்​டியல்​கள் https://tnhealth.tn.gov.in/ என்ற சுகா​தா​ரத் துறை இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. கன்னியாகுமரி மாவட்ட மாணவி அரசு ஒதுக்​கீட்டு இடங்​களுக்​கான தரவரிசைப் பட்​டியலில் 4,371 பேர் இடம் பெற்​றுள்​ளனர்.

இதில், நீட் தேர்​வில் 720-க்கு 520 மதிப்​பெண் எடுத்த கன்​னி​யாகுமரி மாவட்ட மாணவி டி.எஸ்​.பிரகதி முதலிடம் பெற்​றுள்​ளார். 512 மதிபெண்​களு​டன் ஜி.டி.இனிய சுதர்​சன் 2-ம் இடத்​தை​யும், 509 மதிப்​பெண்​களு​டன் ஆர்​.​பாவேஷ் 3-ம் இடத்​தை​யும் பிடித்​தனர்.

தனி​யார் கல்​லூரிகளின் அகில இந்​திய ஒதுக்​கீட்டு இடங்​களுக்​கான தரவரிசைப் பட்​டியலில் 1,430 பேரும் தனி​யார் கல்​லூரி​களின் நிர்​வாக ஒதுக்கீட்டு இடங்களுக்​கான பட்​டியலில் 1,860 பேரும் இடம்​பெற்​றுள்​ளனர்.

அரசு ஒதுக்​கீட்​டுக்கு மொத்​தம் உள்ள இடங்​களில் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டின்​கீழ் அரசு பள்ளி மாணவர்​களுக்கு 97 இடங்​கள் ஒதுக்​கீடு செய்​யப்​படு​கின்​றன. தரவரிசைப் பட்​டியலில் 425 மதிப்​பெண்​களு​டன் ஜி.​பாவனா முதலிடத்​தை​யும், 423 மதிப்​பெண்​களு​டன் என்​.அருண்​கு​மார் 2-ம் இடத்​தை​யும், எஸ்​.அன்​பரசி 3-ம்​ இடத்​தை​யும்​ பிடித்​துள்​ளனர்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application