Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 7, 2025

TET தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள்


ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், ஆசிரியர்களில் பலர் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் துவங்கியுள்ளனர். வட்டார ஆசிரியர் பயிற்றுனர்களும் இத்தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர்.

ஏற்கனவே, டி.ஆர்.பி., மற்றும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், மீண்டும் எதற்காக ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டும்; தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இருப்பினும், 2011க்கு முன் டி.ஆர்.பி., தேர்வு அடிப்படையில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்ளிட்டோர் ரூ.600 செலுத்தி, டெட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

ஆசிரியர்கள் சிலர் தெரிவிக்கையில், '2006ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், வட்டார ஆசிரியர் பயிற்றுனர் பணிக்கு மாற்றப்பட்டனர். 2007 முதல் 201 0 வரை இப்பணிக்கு நேரடி நியமனம் நடந்தது. இவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. அந்நடைமுறை பின்பற்றப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, தலைமையாசிரியர்களும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டிய கட்டாய ம் ஏற்பட்டுள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment