Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 11, 2025

தேர்வு கிடையாது; சொந்த மாவட்டத்தில் அரசு வேலை; 1482 காலியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!


தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி அலுவலகங்களில் கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1482 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.11.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

கிராம ஊராட்சி செயலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1482

மாவட்ட வாரியான காலியிடங்களின் விபரம்

அரியலூர் – 33

செங்கல்பட்டு – 52

கோயம்புத்தூர் – 14

கடலூர் – 37

தருமபுரி – 21

திண்டுக்கல் – 39

ஈரோடு – 26

கள்ளக்குறிச்சி – 33

காஞ்சிபுரம் – 55

கன்னியாகுமரி – 30

கரூர் – 32

கிருஷ்ணகிரி – 50

மதுரை – 69

மயிலாடுதுறை - 31

நாகப்பட்டினம் – 18

நாமக்கல் – 7

நீலகிரி – 33

பெரம்பலூர் – 16

புதுக்கோட்டை – 83

ராமநாதபுரம் – 17

ராணிப்பேட்டை – 31

சேலம் – 54

சிவகங்கை – 51

தென்காசி – 36

தஞ்சாவூர் – 91

தேனி – 20

நீலகிரி - 9

தூத்துக்குடி – 31

திருச்சி – 72

திருநெல்வேலி - 24

திருப்பத்தூர் – 24

திருப்பூர் – 19

திருவள்ளூர் – 88

திருவண்ணாமலை – 69

திருவாரூர் – 38

வேலூர் – 26

விழுப்புரம் – 60

விருதுநகர் – 50

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி, பி.சி, பி.சி.எம், எம்.பி.சி பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் வயது வரம்பில் தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 15,900 – 50,400

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tnrd.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு ரூ. 100, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 50

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.11.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment