Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 15, 2025

ஜன. 24, 25 தேதிகளில் சிறப்பு "டெட்' தேர்வு: டிஆர்பி அறிவிப்பு



தமிழகத்தில் பணியில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு அடுத்த ஆண்டு ஜன. 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) அறிவித்துள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: உச்சநீதிமன்றத் தீர்ப்பாணையின் அடிப்படையில் தமிழக பள்ளிகளில் தற்போது பணியாற்றிவரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் முறைப்படி ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன் 2026-ஆம் ஆண்டில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரி, ஜூலை, டிசம்பர் ஆகிய மாதங்களில் நடத்த கடந்த திங்கள்கிழமை (அக்.13) ஆணையிடப்பட்டது

இதன்படி, ஜனவரி மாதத்தில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை உத்தேசமாக அடுத்த ஆண்டு ஜன. 24-ஆம் தேதி தாள்-1 மற்றும் 25-ஆம் தேதி தாள்-2 நடத்தவும், இதற்கான அறிவிக்கையை அடுத்த மாதம் (நவம்பர்) வெளியிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு ஜூலை, டிசம்பர் மாதங்களில் நடத்த வேண்டிய சிறப்புத் தகுதித் தேர்வு சார்ந்த அறிவிக்கை பின்னர் வெளியிடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment