Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 4, 2025

புதிதாக 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்


நாடு முழுவதும் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 20 பள்ளிகளை இதுவரை கேந்திரிய வித்யாலயா பாள்ளிகள் இல்லாத மாவட்டங்களில் அமைக்கவும், 14 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை முன்னேறி வரும் மாவட்டங்களில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்படவுள்ள இந்த புதிய பள்ளிகள் மூலம், 87 ஆயிரம் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மொத்த முதலீட்டுச் செலவு ரூ.5,863 கோடி என மத்திய அரசு கணக்கிட்டுள்ளது.

No comments:

Post a Comment