JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
/indian-express-tamil/media/media_files/2025/06/01/BvlWqpgGG9Tgdr4jlybV.jpg)
RRB Group D 2026 Jobs: இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு மூலம் நாடு முழுவதும் 22000 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை சேவை நிறுவனமான ரயில்வே குரூப் டி, குரூப் சி, குரூப் பி உள்ளிட்ட பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. அந்தவகையில் தற்போது குரூப் டி பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் 22000 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி
இந்த குரூப் டி பணியிடங்களில் சில பதவிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி
இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 33 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்
இந்தப் பணியிடங்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ. 18000 ஆகும்.
தேர்வு செய்யப்படும் முறை
இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். கணினி வழித் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு 100 வினாக்களுடன் நடைபெறும். இதற்கான கால அளவு ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட மண்டல இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250
இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு 21.01.2026 முதல் தொடங்கி 20.02.2026 அன்று முடியும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
/indian-express-tamil/media/post_attachments/784d9a6a-218.jpg)
No comments:
Post a Comment