/indian-express-tamil/media/media_files/0lwEY8E1F38oaBBUDVpS.jpg)
SSC Constable GD recruitment 2026: மத்திய ரிசர்வ் போலீஸில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காவலர் ஆக வேண்டும் என நினைப்பவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் மத்திய ஆயுதப்படை போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் எல்லை பாதுகாப்பு படை (Border Security Force - BSF), மத்திய தொழிலக பாதுகாப்பு படை (Central Industrial Security Force - CISF), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (Central Reserve Police Force - CRPF), இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை (Indo Tibetan Border Police - ITBP), சாஸ்த்ரா சீமா பால் (Sashastra Seema Bal - SSB), செயலக பாதுகாப்பு படை (Secretariat Security Force - SSF) and அஸ்ஸாம் ஆயுதப்படை (Rifleman (General Duty) in Assam Rifles - AR) ஆகிய பிரிவுகளில் 25,487 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.12.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
கான்ஸ்டபிள் (Constable)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 25,487
காலியிடங்களின் விவரம்
BSF – 616 (ஆண்கள் – 524, பெண்கள் – 92)
CISF – 14595 (ஆண்கள் – 13135, பெண்கள் – 1460)
CRPF – 5490 (ஆண்கள் – 5366, பெண்கள் – 124)
SSB – 1764 (ஆண்கள் – 1764)
ITBP – 1293 (ஆண்கள் – 1099, பெண்கள் – 194)
AR – 1,706 (ஆண்கள் – 1556, பெண்கள் - 150)
SSF – 23 (ஆண்கள் - 23)
கல்வித் தகுதி: இந்த பதவிகளுக்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத் தகுதி: 01.01.2026 அன்று 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 21,700 - 69,100
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு 13 வட்டார மொழிகளிலும் நடைபெறும்.
கணினி வழி தேர்வு 160 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம் (General English), பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning), கணிதம் (Numerical Aptitude) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 20 கேள்விகள் என மொத்தம் 80 கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100, இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2025



No comments:
Post a Comment