Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, December 1, 2025

இனி ஆதாரில் இருக்கும் மொபைல் எண்ணை, சேவை மையத்துக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே மாற்றலாம்.. வந்தாச்சு Aadhaar App செயலி..!



Aadhaar App செயலியில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், இ-மெயில் பதிவு போன்ற பணிகளை டிஜிட்டலாக செய்வதற்கான வசதிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆதாரில் இருக்கும் மொபைல் எண்ணை மாற்றுவதற்காக ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை. வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் எண் மாற்றிக்கொள்ளும் வசதியை UIDAI தனது புதிய ‘Aadhaar App’ இல் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ‘Aadhaar App’ என்ற புதிய செயலி, டிஜிட்டல் ஆதார் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இச் செயலியில் காணப்படும் QR கோட்டினை ஸ்கேன் செய்வதன் மூலம் நம் அடையாளத்தை உறுதி செய்ய முடியும். இதனால் ஆதார் அட்டை நகல் கொடுப்பது, கைரேகை வைப்பது, புதிய வங்கி கணக்கு தொடங்குவது போன்ற பணிகளுக்காக ஆதார் எண்ணையோ முகவரியையோ பகிர வேண்டிய அவசியமும் இருக்காது.

புதிய செயலியில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், இ-மெயில் பதிவு போன்ற பணிகளை டிஜிட்டலாக செய்வதற்கான வசதிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை இப்பணிகளில் பலவற்றை ஆதார் மையத்திற்குச் சென்று மட்டுமே செய்ய முடிந்தது. பொதுமக்களின் நேரத்தை சேமிக்கவும், செயல்முறையை எளிமைப்படுத்தவும் UIDAI இப்போது இந்த மாற்றங்களை செயலியில் சேர்த்துள்ளது. இதனால் இனி ஆதார் மையத்திற்கு சென்று காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, மொபைல் எண் மாற்றும் சேவை இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் புதிய ஆதார் செயலியில் முக அங்கீகாரம் மூலம் உள்நுழைந்த பின் ‘My Aadhaar Update’ பகுதியில் இந்த சேவையைப் பயன்படுத்தலாம். மொபைல் எண் மாற்றத்துக்கு ரூ.75 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள சேவைகள் இன்னும் சில வாரங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

No comments:

Post a Comment