செல்போன் கேமரா ஃபோட்டோ எடுக்க மட்டுமில்லை. ஸ்மார்ட்போனில் உள்ள ஆச்சரியமூட்டும் பயன்கள்.. என்னன்னு தெரியுமா?.!!!

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் திறன் பேசிகளில் உள்ள கேமராக்கள் வெறும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுப்பதற்கு மட்டுமே பயன்படுவதில்லை.

அதன் மறைந்துள்ள பல்வேறு சிறப்பம்சங்கள் நமது பல வேலைகளை எளிதாக்குகின்றன. எடுத்துக்காட்டாக உங்கள் வீட்டு தொலைக்காட்சி அல்லது குளிரூட்டியின் ரிமோட் வேலை செய்யவில்லை என்றால் அதன் பேட்டரி தீர்ந்துவிட்டதா என்பதை கேமரா மூலம் கண்டறியலாம்.

ரிமோட்டின் பொத்தானை அழுத்தும் போது கேமரா வழியாகப் பார்த்தால் அதில் நீல நிற ஒளி தெரிந்தால் ரிமோட் நன்றாக உள்ளது என்றும் ஒளி தெரியவில்லை என்றால் பேட்டரி மாற்றப்பட வேண்டும் என்றும் பொருள். அதேபோல் மிகச் சிறிய எழுத்துக்களைப் படிக்க சிரமப்படுபவர்கள் கேமராவை பெரிதாக்கிப் பார்ப்பதன் மூலம் பூதக்கண்ணாடி போல அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் கேமராக்களைப் பயன்படுத்தி ஒரு பொருளின் நீளம் மற்றும் அகலத்தை அளவிட முடியும் இதற்காக பல்வேறு செயலிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. புதிய இடங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள தெரியாத மொழிகளை உடனுக்குடன் நமது தாய்மொழியில் மொழிபெயர்த்துப் படிப்பதற்கும் ஏதேனும் ஒரு பொருளைப் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடுவதற்கும் கேமராக்கள் பேருதவி புரிகின்றன.

கூகுள் லென்ஸ் போன்ற வசதிகள் மூலம் ஒரு பொருளின் புகைப்படத்தை எடுத்தால் அது குறித்த முழு விவரங்களையும் இணையம் வழியாகப் பெறலாம். அலுவலகக் கோப்புகளை ஸ்கேனர் இயந்திரம் இல்லாமலேயே கேமரா மூலம் மிகத் தெளிவாகப் படம் பிடித்து மின் அஞ்சல் வழியாக அனுப்பும் வசதியும் இதில் உள்ளது. இத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் மூலம் திறன் பேசி கேமராக்கள் நமது வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு முக்கியக் கருவியாக மாறியுள்ளன.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel