நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு உணவுத் துறை ஒரு முக்கியமான எச்சரிக்கை அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொது விநியோக முறையை (Public Distribution System - PDS) இன்னும் வெளிப்படையானதாக மாற்ற அரசாங்கம் தரபோகு பல கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து தான் வருகிறது. குறிப்பாக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana - PMGKY) திட்டத்தின் கீழ் நீங்கள் இலவச கோதுமை மற்றும் அரிசியைப் பெற்று வருகிறீர்கள் என்றால், e-KYC செயல்முறையை நீங்கள் உடனடியாக முடிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த செயல்முறையை சரியான நேரத்தில் செய்யத் தவறினால், ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்படலாம் என்று அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு e-KYC புதுப்பிப்பு: அரசாங்கம் வெளியிட்ட காலக்கெடு
புதிய அரசாங்க வழிகாட்டுதல்களின்படி, ரேஷன் கார்டில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து உறுப்பினரும் சரிபார்க்கப்பட வேண்டும் என்பதே. இதற்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அட்டையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்கள் ஆதார் அட்டைகளை இணைத்து பயோமெட்ரிக் அடையாளத்தை வழங்க வேண்டும். சரிபார்ப்பு முழுமையடையாத உறுப்பினர்கள் தங்கள் ரேஷன் பொருட்களை பெற முடியாது.
பயோமெட்ரிக் சரிபார்ப்பு ஏன் கட்டாயம்?
ரேஷன் பொருட்கள் மற்றும் ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்கள் எந்த வித மோசடியிலும் சிக்கிக் கொள்ளாமல் சரியான அளவில் ரேஷன் பொருட்களையும், தகுதியுள்ள நபருக்கு ரேஷன் பொருட்களையும் பெற வேண்டும் என்கிற நோக்கதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. e-KYC இன் முதன்மை நோக்கம், தகுதியற்ற அல்லது போலி ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்களின் பெயர்களை அகற்றுவதாகும்.
ரேஷன் கார்டுகளிலிருந்து பெயர்கள் நீக்கப்படலாம்
அரசு வழங்கியுள்ள காலக்கெடுவிற்குள் e-KYC செயல்முறையை பூர்த்தி செய்ய தவறும் குடும்பங்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். சரிபார்ப்பு செயல்முறை முழுமையடையாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் செல்லாது என்று உணவு துறை கருதி, போர்ட்டலில் இருந்து அவர்களின் பெயரை நீக்கும். இது உங்கள் மாதாந்திர ரேஷன் ஒதுக்கீட்டை நேரடியாகப் பாதிக்கும் மற்றும் குடும்பத்தினர் பெறும் இலவச உணவுப் பொருட்களும் பெற முடியாமல் போகும்.
ekyc எங்கு, எப்படிச் சரிபார்ப்பது?
இந்த செயல்முறை மிகவும் எளிமையானது மற்றும் இதற்காக நீங்கள் எந்த அரசாங்க அலுவலகத்திறகும் செல்ல அவசியமில்லை:
உங்கள் பகுதியில் உள்ள அரசு ரேஷன் டீலரிடம் செல்லுங்கள்.
உங்கள் ஒரிஜினல் ரேஷன் கார்டு மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளையும் எடுத்துச் செல்லவும்.
ரேஷன் கடையில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
இந்தச் செயல்முறைக்கு அரசாங்கம் எந்த கட்டணமும் வசூலிக்காது, இந்த செயல்முறை முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment