Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, January 8, 2026

கொலஸ்ட்ரால்


40 வயதை கடந்து விட்டால் அனைவருக்குமே இப்போது கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படுகிறது.

நாம் சாப்பிடும் அதிகப்படியான எண்ணெய் நிறைந்த உணவுகளால் கொலஸ்ட்ரால் அதிகரித்து உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால் இடது பக்க கை அதிக கடுப்பு, இடது பக்க முதுகில் அதிக வலி, இடது பக்க மார்பு வலி போன்ற அறிகுறிகள் உடலில் அடிக்கடி ஏற்படும்.

இவ்வாறு ஏற்பட்டால் அதனை சாதாரணமாக நம்ம எடுத்துக் கொள்ளக் கூடாது. அது உடலில் கொலஸ்ட்ரால் மிகுதியாக உள்ளது என்பதைகாட்டும் அறிகுறிகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடனே cholesterol lipid profile test எடுத்து பார்க்க வேண்டும்.

அதில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால் கண்டிப்பாக மருந்து உட்கொண்டு கொலஸ்ட்ராலை நார்மலுக்கு கொண்டு வர வேண்டும்.

கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும் போது BP அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

கொலஸ்ட்ரால் நார்மலை விட கொஞ்சம் அதிகமாக இருந்தால் பூண்டுடன் பால் சேர்த்து குடித்து வந்தால் குறைந்து விடும்.

கொலஸ்ட்ரால் இருப்பதை கண்டுக்
கொள்ளாமல் விட்டால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே 40 வயதை கடந்தவர்கள் இடது கை வலி அல்லது கடுப்பு இருந்தால் உடனே டெஸ்ட் எடுத்து பார்த்து விடுவது நல்லது.

நமது உடலில் LDL, HDL என இரண்டு கொழுப்பு உள்ளது.

LDL என்பது கெட்ட கொழுப்பு.

HDL என்பது நல்ல கொழுப்பு ஆகும்.

இவை இரண்டுமே நார்மலாக தான் இருக்க வேண்டும்.

அதிகமானாலும் குறைந்தாலும் பிரச்சனைதான்.

எனவே 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் எண்ணெய் மற்றும் நெய்யில் பொறித்த உணவுகளை தவிர்த்து கொள்வது நல்லது. உடல் நலத்தை பாதுகாப்போம் ஆரோக்கியமாக வாழ்வோம்

No comments:

Post a Comment