Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Thursday, January 8, 2026

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம்உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கவும் செய்கிறது.

எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும் வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் இனி காண்போம்.

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து 200 மி.லி அளவு தண்ணில் போட்டு முடி வைத்து விடவும்.

காலையில் எழுந்தவுடன் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

பின் வெந்தயத தண்ணீரை குடியுங்கள் தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணி குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

இது தவிர, உடலை அழகுடன் வைத்துக் கொள்வதிலும் வெந்தயத்தின் எங்கு உள்ளது

ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிகஸியில் பொடி செய்து கொள்ளுங்கள்.

வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தணணிரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணக் கோளாறுகள் அனைத்தும் நீங்கிவிடும்.

மேலும் சாக்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்

வெறும் வயிற்றில் என் உயிரைக் குடிப்பதால் மிகுந்த பயன் ஏற்படும்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சாக்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்

வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

வெந்தயத்தை உள்ளுக்குள் உட்கொண்டு உடலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment