Breaking

Saturday, January 17, 2026

மிஸ் பண்ணிடாதீங்க.. தமிழ்நாட்டில் SIR பணிகள் நாளையுடன் நிறைவு! இதுவரை 12,80,110 பேர் விண்ணப்பம்!


தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகள் நாளையுடன் நிறைவடைகின்றன.

இதுவரை ஒட்டுமொத்தமாக 12 லட்சத்து 80 ஆயிரத்து 110 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை பதிவு செய்தவர்கள் உள்பட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தப்பட்டது. கணக்கீட்டு படிவங்கள் பெறும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் என சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

இதையடுத்து வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம்பெற்றும், விவரங்கள் உறுதிப்படுத்த வேண்டியவர்களுக்கு கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க கோரி நோட்டீஸ் அனுப்பும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி, 12 லட்சத்து 43 ஆயிரத்து 363 வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணிகள் நடைபெற்றது. அவர்களின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த நடவடிக்கை, வாக்காளர் பட்டியலின் துல்லியத்தையும் தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இதுவரை ஒட்டுமொத்தமாக 12 லட்சத்து 80 ஆயிரத்து 110 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகள் நாளையுடன் நிறைவடைய உள்ளது.

இதுவரை இந்த காலகட்டத்தில் கிடைத்த விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து, பிப்ரவரி 14-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுபவர்கள் மட்டுமே, வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment