கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் தள்ளுபடியில் அரசு குட்நியூஸ்? முந்திக்கிட்டாரே எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுங்கட்சியான திமுகவுக்கு போட்டியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி கொண்டிருக்கிறார்.

.திமுக, அதிமுக இரு தரப்பின் வாக்குறுதிகளை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கும்போது, அதிக எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.. நேற்றைய தினம் என்ன நடந்தது?சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக கடந்த 2021-ல் சொன்ன நிறைவேறாத 150க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை இந்த முறையும் அறிக்கையில் மீண்டும் சேர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

திமுக வாக்குறுதிகள் என்னென்ன: குறிப்பாக நீட் தேர்வு ரத்து, ரூ.100-க்கு சிலிண்டர் விலை, மாதம் ஒரு முறை மின் கட்டணக் கணக்கு போன்ற முக்கிய வாக்குறுதிகள் உள்ளன.டாஸ்மாக் கடைகள் குறைத்தல், சம வேலைக்கு சம ஊதியம், எல்லாருக்கும் வீடு, கல்விக் கடன் தள்ளுபடி போன்ற சமூக-நல திட்டங்களையும் அந்த பட்டியலில் சேர்த்துள்ளதாக தெரிகிறது.. ஆனால், கூட்டுறவு சங்க நகைக்கடன் பற்றி அறிவிப்பு, இந்த முறையும் திமுக தரப்பில் இருக்குமா என்று தெரியவில்லை..ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் விவசாயிகளின் வாக்குகளை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அமைந்து வருகின்றன.

கூட்டுறவு வங்கி தங்க நகைக்கடன்: கடந்த 2021 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்து சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான சுமையை ஏற்றுக் கொண்டது. இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதால், இந்த முறையும் அதேபோன்றதொரு அதிரடி அறிவிப்பு வெளியாகும் என்ற அபரிமிதமான நம்பிக்கையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.எனினும், தேர்தலுக்கு முன்பாகவே நகைக்கடன் தள்ளுபடி குறித்த ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வரக்கூடும் என்ற பேச்சும் பலமாக எழுந்துள்ளது... கடந்த 2 மாதங்களுக்கு முன்பேயே , கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் குறித்த விவரங்களைத் தயார் நிலையில் வைக்கும்படி அதிகாரிகளுக்கு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்திருந்தன..

நகை கடன் தள்ளுபடி: 

அதனால்தான் திமுக மீண்டும் இந்த வாக்குறுதியை வழங்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் வாக்காளர்களை கவரும் வகையில் அதைவிடப் பெரிய அளவிலான தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடத் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது..அதுமட்டுமல்ல, நேற்றைய தினம் அதிமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்..

விவசாயிகள் குஷி: 

எடப்பாடி பேசும்போது, "திமுக அரசு நகைக்கடன் தள்ளுபடி செய்ததை போலவே, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இது கடன் சுமையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.இதுமட்டுமல்ல, அதிமுகவின் முதல்கட்ட தேர்தல் அறிக்கையிலேயே பல்வேறு அற்புதமான திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, பெண்களைக் கவரும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு இலவச சேலை வழங்கப்படும் என்ற புதிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்..

எடப்பாடி பழனிசாமி குட்நியூஸ்: 

பெண்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்து வசதி போல, ஆண்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்து வசதி செய்து தரப்படும் என்ற அவரது அறிவிப்பு கூட்டத்தில் பெரும் கைதட்டலை பெற்றுள்ளது.. திமுக அரசு ஏற்கனவே தள்ளுபடி அஸ்திரத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியும் அதே பாணியில் கூட்டுறவு கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதியை அறிவித்திருப்பது தேர்தல் களத்தை இன்னும் விறுவிறுப்பாக்கியுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel