BT யிலிருந்து PG ஆக பதவி உயர்வில் சென்றவர்கள் ,PG ஆக பணியேற்ற நாள் முதல் ஒரு வருடத்திற்குள் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவர்கள் தொடர்ந்து அதே உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக தொடர்ந்து பணியாற்ற முடியும்.
ஒரு ஆசிரியர் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளை வகிக்க முடியாது என்றும் BT OR PG ஒன்றில் மட்டுமே தொடர முடியும் என்பதால் PG TO HSHM Promotion ஐ உச்சநீதிமன்ற நீதிபதி ஏற்கவில்லை.
BT யிலிருந்து PG ஆக பதவி உயர்வில் சென்றவர்கள் தங்களின் தகுதி காண் பருவத்தை முடித்து விட்டால் அவர் PG ஆக மட்டுமே தொடர முடியும் என்பது நீதிபதியின் கருத்தாக அமைந்தது. RULE NUMBER 10(A)(1) பற்றி விவாதிக்கப்பட்டது. PROMOTION RULE ல் ஒருவரை HSHM ஆக பதவி உயர்வு செய்வதில் Feeder category யில் PG இல்லை என்பது நீதி அரசரின் கருத்தாக அமைந்தது. RULE ல் இல்லாதது அரசாணையில் உள்ளது.
காலம் காலமாக பாரம்பரியமாக செல்கிறோம் என்பதை ஏற்க முடியாது. விதிகளில் இருக்க வேண்டும். நீங்கள் BT ஆக ஒருமுறை நேரடியாக நியமிக்கப்பட்டு விட்டீர்கள். பிறகு PG ஆக Recruitment by transfer மூலம் மீண்டும் நியமிக்கப்பட்டு விட்டீர்கள்.
தங்களுக்குரிய ஓராண்டு தகுதி காண் பருவத்தை முடித்து விட்டீர்கள். இன்றைய 40 நிமிட விவாதங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
Next hearing - final 11.02.2026



No comments:
Post a Comment