THAMIZHKADAL TODAY NEWS

கேந்த்ரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்க திட்டம்

'தமிழகத்தில் இயங்கும் சில குறிப்பிட்ட கேந்த்ரிய வித்யாலயா பள்ளிகளில், பரிட்சார்த்த முறையில், தமிழை பயிற்றுமொழியாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, சென்னை கேந்த்ரிய வித்யாலயா சங்கதன் மண்டல துணை ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை, சவுரிபாளையம், கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில், தமிழை பயிற்று மொழியாக அமல்படுத்த வேண்டும் என, மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன், சென்னை கேந்த்ரிய வித்யாலயா சங்கதன் மண்டல அலுவலகத்திற்கு மனு அளித்தார். மனுவுக்கு, துணை ஆணையர் செந்தில்குமார் அளித்த பதில்: நாடு முழுதும் பணிபுரியும் மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு துறை ஊழியர்களுக்கு, எப்போது வேண்டுமானாலும் பணி மாறுதல் இருக்கலாம். அச்சமயங்களில், அவர்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கவே கே.வி., பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இதனால், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், இப்பள்ளிகள், சிறப்பு வகை பள்ளிகளாக கருதப்படுகின்றன. இங்கு, மத்திய அரசு கொள்கைகள், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கட்டமைப்புக்குள், கே.வி., சங்கதன் வழிகாட்டுதல்படி சேர்க்கை பணிகள் நடக்கின்றன. தமிழகத்தில் இயங்கும் குறிப்பிட்ட சில கே.வி., பள்ளிகளில், தமிழை பயிற்று மொழியாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்முன்னோடி திட்டத் தின் முடிவுகள் மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில், மற்ற கே.வி., பள்ளிகளில் அந்தந்த பிராந்திய மொழி, பயிற்றுமொழியாக்குவது குறித்து எதிர்காலத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ''கே.வி., பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக கட்டாயம் கற்பிக்க வேண்டுமென, நீண்ட காலமாக போராடியதற்கு கிடைத்த வெற்றியாக இந்த அறிவிப்பு உள்ளது; இது வரவேற்கத்தக்கது. ''இதேபோல, ஆங்கிலம் பயிற்றுமொழியாக உள்ள கே.வி., பள்ளிகளில், தமிழ் ஒரு மொழிப்பாடமாக கற்பிக்க வேண்டும். மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும், தமிழை கட்டாய மொழிப்பாடமாக மாற்ற வேண்டும்,'' என்றார்.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel