Wednesday, April 29, 2026

இன்றைய செய்திகள் 29.04.2026(புதன்கிழமை)



🌹துரோகிகள் யார் தெரியுமா

துரோகத்தை செய்து விட்டு அந்த குற்ற உணர்வு சற்றும் இல்லாமல் திரிபவர்கள் தான் மிகச் சிறந்த துரோகிகள்.!

🌹🌹கவலைகள் வந்து கொண்டுதான் இருக்கும் அதனை நிரந்தரமாக்குவதும் தற்காலிகமாக்குவதும் உங்களிடம் தான் உள்ளது நிரந்தரமாக்கினால் நீங்கள் நோயாளி தற்காலிகமாக்கினால் நீங்கள் புத்திசாலி.!!

🌹🌹🌹காயப்படுத்தும் மனிதர்களிடம் நியாயம் கேட்டு நிற்காதீர்கள்.

ஏனெனில்,அவர்கள் நியாயமானவர்கள் என்றால் காயப்படுத்தியிருக்கமாட்டார்கள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎩🎩தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

👉10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாகும்.

👉கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்...

👉இந்தாண்டு எழுதிய தேர்வின் முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாகும்.

🎩🎩1.12 லட்சம் மாணவர்கள் சேர்க்கை

2026-27 ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1.12 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்

ஒன்றாம் வகுப்பில் 97,737, இரண்டு முதல் 8-ஆம் வகுப்பு வரை 8,178 மற்றும் மழலையர் வகுப்புகளில் 6,796 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகத் தகவல்.

🎩🎩3வது குழந்தை பிறப்பு மற்றும் அதைத் தொடர்ந்த குழந்தை பிறப்புகளுக்கும் 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் - DSE செயல்முறைகள் வெளியீடு. 👉அரசாணை, அரசுக் கடிதம் மற்றும் நீதிமன்ற ஆணை வெளியீடு.

🎩🎩NILP - புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - 2026 - 27 திட்டச் செயல்பாடு - DSE Proceedings வெளியீடு.

👉பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் - புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - 2026-27 திட்டச் செயல்பாடு - இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.

👉கற்போர் மதிப்பீடு நாள்

18.10.2026

🎩🎩கேள்விக்குறியாகும் எதிர்காலம்

👉புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சு கலாச்சாரத்தோடு தொடர்புடைய மக்கள் வாழும் மாநிலமாகும்

👉பிரெஞ்சு மொழியோடு உணர்வுபூர்வமான பிணைப்பு அம்மாநில மக்களுக்கு உண்டு

👉முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பிரெஞ்சு மொழி படித்த மாணவர்களின் எதிர்காலம் அங்கு கேள்விக்குறியாகி உள்ளது

👉புதுச்சேரியில் CBSE பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

🎩🎩வெப்ப அலைகளிலிருந்து (Heat Waves) பாதுகாத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் குறைப்பு முகமையின் அறிவுரைகள் வெளியீடு. 🎩🎩கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறிவுரைகள் வெளியீடு - DSE Proceedings வெளியீடு.

🎩🎩சுற்றுச்சூழல் மேலாண்மை டிப்ளமோ படப்பு: சென்னை பல்கலைக்கழகத்தில் அறிமுகம்

🎩🎩பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

🎩🎩தேர்தல் ஆணையம் சார்பில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இன்று சிறப்பு வகுப்பு

🎩🎩வாக்கு எண்ணிக்கைக்கான வழிமுறைகள் வெளியீடு - தபால் வாக்குகளே முதலில் எண்ணப்படும்.

🎩🎩வங்கதேசத்துக்கான புதிய இந்திய தூதர் நியமனம்

வங்கதேசத்துக்கான இந்திய தூதராக தினேஷ் திரிவேதி நியமனம்...

அண்மையில் இரு நாட்டு உறவில் ஏற்பட்ட விரிசல்களை சரி செய்வார் என எதிர்பார்ப்பு.

🎩🎩வாக்கு எண்ணும் மையத்தில் ஜனநாயகன் படம்

சென்னையில் வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் ஜனநாயகன் படம் பார்க்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கைது - 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை

🎩🎩இனி WhatsApp இதில் இயங்காது!

Android 6-க்கும் குறைவான software-களில் இயங்கும் செல்போன்களில் இனி WhatsApp செயலி இயங்காது என மெட்டா நிறுவனம் அறிவிப்பு

செப்டம்பர் 8-ம் தேதிக்கு பிறகு Android 6-க்கும் மேலே உள்ள போன்களில் மட்டுமே வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியும் என்பதால், பயனர்கள் Back-up எடுத்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

🎩🎩கொடைக்கானலில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரிதான கார்கள் மற்றும் பழமையான பொருட்கள் ஆகியவற்றை கண்டு ரசித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🎩🎩ஒரு தறுதலையின் செயல்"

"கார் கண்ணாடி உடைப்பு சம்பவத்தில், காவல்துறை விசாரித்ததில் இது தனிப்பட்ட ஒரு தறுதலையின் செயல் என்றும், எந்த அரசியல் தொடர்பும் இல்லையென தெரியவந்திருக்கிறது, கல்லெறிந்த நபர் எச்சரித்து அனுப்பிவிடப்பட்டார். உடன்நின்ற அனைவருக்கும் நன்றி. இதைச் சொல்லவேண்டிய கடமை எனக்கிருப்பதால் இதைப் பகிர்கிறேன்"

-இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் சமூக வலைத்தள பதிவு

🎩🎩தமிழ்நாட்டில் பெரும்பாலான கோயில்கள் அரசு புறம்போக்கு நிலங்களில்தான் உள்ளன - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

திண்டுக்கல் மாவட்டம் கோணப்பட்டி குன்றில் கடந்த ஜனவரி மாதம் மனுதாரரால் நிறுவப்பட்ட முருகன் சிலையை வருவாய் துறையினர் அவரிடமே ஒப்படைக்க வேண்டும், அந்த இடத்திலேயே மீண்டும் சிலையை நிறுவி விழாக்களை நடத்திக் கொள்ளலாம் - நீதிபதி ஸ்ரீமதி

🎩🎩அனைத்து மருத்துவமனைகளிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவு.. வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை_

🎩🎩கொளுத்தும் வெயிலால் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி மும்முரம்.. விலை டன் ஒன்று ரூ.1,300 ஆக குறைந்ததால் உற்பத்தியாளர்கள் கவலை_

🎩🎩இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து.. 8, 284 இந்திய பொருட்களுக்கு இனி நியூசிலாந்தில் வரி விலக்கு

🎩🎩ரஷ்ய அதிபர் புதினுடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி சந்திப்பு.. ஈரானின் நலனுக்காக சாத்தியமான அனைத்தையும் செய்வோம் என புதின் உறுதி

🎩🎩3 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்ட முயல்வது கண்டனத்திற்குரியது: சீமான் கண்டனம்

🎩🎩காந்தி மண்டபம் மற்றும் IIT மெட்ராஸ் அருகே உள்ள சர்தார் பட்டேல் சாலை, சிக்னல் இல்லாத வகையில் விரைவில் மாற்றம்

🎩🎩ஜஸ்ட் ஒன்னேகால் மணிநேரம் தான்.. சென்னையிலிருந்து பெங்களூரு செல்ல .!! புல்லட் ரயில் திட்டம் குறித்து அறிவித்த ரயில்வே அமைச்சர்

🎩🎩ரஷ்ய எண்ணெய் ஆலைகளை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் உக்ரைன்

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றான Tuapse மீது உக்ரைன் 3வது முறையாக தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு!

ஏற்கனவே ஏப்.16, 20 தேதிகளில் நடந்த தாக்குதல்களில் கடுமையாக சேதமடைந்து உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில்,நேற்று மீண்டும் தாக்குதல். எண்ணெய் கிடங்குகள் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டு, கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு

🎩🎩அதிர்ச்சி தரும் செய்திகள் வருகின்றன..

மே 4 அன்று குழந்தைகளை குடும்ப உறுப்பினர்கள் கவனிக்க வேண்டும்"

விஜய் விஜய் என்று "குழந்தைகள் நடந்துகொள்வது விசித்திரமா இருக்கு; தோற்றால் தாங்கிக் கொள்ளும் மனநிலை வேண்டும்

தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்

ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் பேட்டி

🎩🎩லிபியாவில் புதிய எண்ணெய், எரிவாயு இருப்புக்களைக் கண்டறிந்த இந்தியா

லிபியாவில் உள்ள காடாமஸ் படுகையின் Area 95/96-ல் புதிய எண்ணெய் & எரிவாயு இருப்புக்களைக் கண்டறிந்தது இந்தியா!

Oil India, IOCL-ளின் கூட்டு முயற்சியில் கண்டறியப்பட்ட இது, அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 5வது பெரிய எண்ணெய் வளம் ஆகும்

சோதனையில் தினசரி 13 மில்லியன் கன அடி எரிவாயு, 327 பீப்பாய் கன்டென்சேட் எடுக்க முடியும் என தெரிவிப்பு

🎩🎩புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜுன் மாதம் 1ம் தேதி முதல் தொடக்கம்

புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜுன் மாதம் 1ம் தேதி முதல் தொடக்கம்

33 விவரங்கள் சேகரிக்கும் பணியில் தவறான தகவல் வழங்கினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

🎩🎩மன்னார்குடி - திருப்பதி விரைவு ரயில் LHB தொழில்நுட்ப பெட்டிகளாக மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

🎩🎩தொடர்ந்து 2வது நிதி ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது நம் தமிழ்நாடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

🎩🎩AI மூலம் உருவாக்கப்படும் புதிய இணையதளங்கள்

உலகளவில் 2022ம் ஆண்டு முதல் வெளியான இணையதளங்களில் 35%, AI உதவியுடன் உருவாக்கப்பட்டவை என ஆய்வில் தகவல்

AI மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்கள், இணையத்தை மேலும் நேர்மறையாகவும், சுருக்கமாகவும் மாற்றி வருவதாகவும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறிவு

🎩🎩முடங்கும் நிலையில் விமான நிறுவனங்கள்.. மத்திய அரசுக்கு FIA கூட்டமைப்பு அவசர கோரிக்கை..!

எரிபொருள் விலை உயர்வால் விமான நிறுவனங்கள் முடங்கும் நிலையில் உள்ளதாக எச்சரித்து மத்திய அரசுக்கு இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு அவசர கடிதம்.

துறையை மீட்க வரி சலுகைகள் மற்றும் நிதியுதவி வழங்க வேண்டும் எனவும், உரிய உதவி கிடைக்காவிட்டால், பல நிறுவனங்கள் சேவையை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுப்பு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

No comments:

Post a Comment