Subscribe Us

Sunday, April 19, 2026

தேர்தல் மை பற்றிய தகவல்கள்


தேர்தல் மை பற்றிய தகவல்கள்

விரலில் வைக்கும்போது, அது தோலில் உள்ள உப்புச்சத்து மற்றும் ஈரப்பதத்துடன் வினைபுரிகிறது. சூரிய ஒளி படும்போது, சில்வர் நைட்ரேட் சில்வர் குளோரைடாக மாறி தோலுடன் மிகக் கடுமையாக ஒட்டிக்கொள்கிறது.

இந்த சில்வர் குளோரைடு நீரில் கரையாது. இதனால் சோப்பு, ஆல்க ஹால் அல்லது நெயில் பாலிஷ் ரிமூ வர் கொண்டு கழுவினாலும் இந்த மை எளிதில் அழியாது. இந்த மை தோலின் மேற்பகுதியில் மட்டும் இல்லாமல், நகம் மற்றும் தோலுக்கு இடையில் உள்ள பகுதியில் ஊடுருவிச் செல்கிறது. நகம் வளர்ந்து பழைய தோல் செல்கள் உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும் வரை சுமார் 2 முதல் 4 வாரங்கள் இந்த மை நீடிக்கும். இந்தியாவில் பயன்படுத்தப்படும் இந்த அழியாத மை, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள 'மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட்' என்ற அரசு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் தேர்தல் மை பயன் படுத்தும் முறை 1962-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

Popular Feed