JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, May 9, 2026

முதல் மூன்று வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் தயார்

தமிழகத்தில், மாநில கல்வி கொள்கையை பின்பற்றி, 1, 2, 3ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் தயாராக உள்ளன. மத்திய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்காததால், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவின் பரிந்துரையின்படி, மாநில கல்விக் கொள் கை கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன்படி, எட்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க, கல்வி மற்றும் நிர்வாக குழுக்கள் அமைக்கப்பட்டன. அக்குழுக்கள், மாணவர்களின் மனப்பாடம் செய்யும் சுமையை குறைத்து, ஆளுமைத்திறன், வாழ்க்கை திறன் மற்றும் நேர்மறை சிந்தனையை வளர்க்கும் வகையில், பாடத்திட்டங்களை மாற்ற கருத்துருக்களை வழங்கின. அவை, 't nschools.gov.in' இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கல்வியாளர்கள், பெற்றோர், பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

அதன் அடிப் படையில், இந்த கல்வியாண்டில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை மாற்றும் பணி தொடங்கியது. அடுத்து படிப்படியாக, ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்றம் தொடர உள்ளது. தொடக்க கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: வாழ்க்கை திறன், முதலுதவி, பாதுகாப்பு முறைகள், சுய பராமரிப்பு பழக்கங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி, புதிய பாடத்திட்டங்களை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கி உள்ளது.

இந்த புத்தகங்களில், பழையபடி மாணவர்களின் மனப்பாடம் செய்யும் சுமை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, தேவையான புத்தகங்களை, பாடநுால் கழகம் அச்சிட்டு தயாராக வைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment