
மாணவர்களிடையே தலைமைத்துவம். குழுப்பணி, ஒழுக்கம், சமூகப் மனப்பான்மை, ஒற்றுமை. குழுச்செயல்பாடு மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்" திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2026-27 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு பள்ளிகளிலும் "மகிழ் முற்றம்" மாணவர் குழு செயல்பாடுகளை முறையாகவும், சிறப்பாகவும் செயல்படுத்திடும் நோக்கில், "மகிழ் முற்றம்" செயல்பாடுகளை மாணவர் பாராளுமன்ற செயல்பாடுகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயல்பாடானது மாணவர்களை பள்ளி நிகழ்வுகளில் ஆர்வமுடன் ஈடுபடுத்தி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி, ஒவ்வொரு மாணவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கி. அவர்களை திறமையான தலைவர்களாகவும், பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்க அடித்தளமாக அமையும்.
2026-2027 ஆம் ஆண்டிற்கான மகிழ் முற்றம் செயல்பாடுகளை பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
DSE - Magizh Mutram 2026-27 | Download here





No comments:
Post a Comment