A contended mind is a continual feet
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. என் தாய் தந்தை சொல்படி கேட்டு நடப்பேன். அவர்கள் தான் என் மீது முதலில் அக்கறை கொண்டவர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் .
2. பிறர் என்னிடம் நட்பு பாராட்டுவதைப் பற்றி என் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வேன்.
பொன்மொழி :
"நீங்கள் உலகில் காண விரும்பும் மாற்றமாக நீங்களே இருங்கள்.""மகாத்மா காந்தி
Thought for the Day :
"Be the change that you wish to see in the world."
பொது அறிவு :
1. உயிர் காக்கும் ஹார்மோன் எது?
கார்டிசோல்.
2 . எந்த தனிமம் புற்றுநோய் செல்களை அழிக்கிறது?
கோபால்ட் -60
English words :
Arrived - reached the place,வந்து சேர்தல்.
Profession - Job or work, தொழில்.
புவியியலும் சுற்றுசூழலும் :
"உலகம் பொதுவாக 7 கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது . Asia (ஆசியா)
Africa (ஆப்பிரிக்கா)
North America (வட அமெரிக்கா)
South America (தென் அமெரிக்கா)
Antarctica (அண்டார்டிகா)
Europe (ஐரோப்பா)
Australia (ஆஸ்திரேலியா) ஆகும்"
NMMS :
SAT - SCIENCE
ஒரு கம்பியின் வழியே 60 கூலூம் மின்னூட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது??
மின்னூட்டம் q. = 60 கூலூம்
நேரம் t. = 2 நிமிடம் × 60விநாடிகள்
= 120 விநாடிகள்
மின்னோட்டம் l = q/ t = 60C/120s = 0.5 A
(1) 0.5 ஆம்பியர்
(2) 0.1 ஆம்பியர்
(3) 0.25 ஆம்பியர்
(4) 120 ஆம்பியர்
விடை: (1) 0.5 ஆம்பியர்
ஜூன் 23
நீதிக்கதை
அம்மாவின் அறிவுரை.
கண்ணனூர் என்ற கிராமத்தில் ஹரீஷ் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய அம்மா, அப்பா எப்போதும் நல்ல அறிவுரைகளைக் கூறுவார்கள். ஆனால் ஹரீஷ்அவர்களுடைய பேச்சைக் கேட்காமல் தன் விருப்பப்படி நடந்துகொள்வான்.
ஒருநாள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும்போது, நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றங்கரையில் விளையாடச் சென்றான். செல்லும் முன் அவனுடைய அம்மா, “மாலை நேரத்தில் ஆற்றங்கரைக்கு போகாதே, அது ஆபத்தான இடம்” என்று எச்சரித்தார். ஆனால் ஹரீஷ் அதைக் கவனிக்கவில்லை.
விளையாடிக்கொண்டிருந்தபோது அவன் தவறி வழுக்கி விழுந்தான். அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த ஒரு பெரியவர் அவனை காப்பாற்றினார்.
வீட்டிற்கு வந்த ஹரீஷ், அம்மாவின் அறிவுரையை மதிக்காமல் நடந்ததற்காக வருந்தினான். “அம்மா, இனிமேல் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பேன்” என்று கூறினான்.
அதன் பிறகு அவன் பெற்றோரின் அறிவுரைகளை மதித்து நடக்கத் தொடங்கினான். அவன் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது.
நீதி: பெற்றோரின் அறிவுரையும் அன்பும் நம் நலனுக்காகவே இருக்கும்; அவர்களை மதித்து நடக்க வேண்டும். 🌷👨👩👦
இன்றைய செய்திகள்






No comments:
Post a Comment