SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL

Subscribe Us

Thursday, June 18, 2026

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்!

கடந்த ஆட்சியில் திமுக அரசால் தொடங்கப்பட்ட, மாணவர்களுக்கு பெரும் பலன் அளித்த நான் முதல்வன் திட்டத்தின் பெயர் தற்போது 'திறன் தமிழ்நாடு' (TN Skill) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் தொடர்பாக பதிவிட்ட பழைய பதிவுகள் மற்றும் வீடியோக்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

மே 15ம் தேதியிலிருந்து போடப்பட்ட பதிவுகள் மட்டுமே உள்ளன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின்கீழ் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வி, தொழில்நுட்பத் திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

தொழில் வழிகாட்டுதல், இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், போட்டித் தேர்வுப் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவை தொடர்ந்து இதன் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன.



தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இத்திட்டத்தின் பெயர் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment