THAMIZHKADAL TODAY NEWS

மக்கள் தொகை கணக்கெடுப்பு - காலை அல்லது மாலை மேற்கொள்ள அனுமதி அளிக்க கோரி சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்க உத்தரவு.

தென்காசி மாவட்டம். 2027ம் ஆண்டிற்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட பணிகளின் ஒரு பகுதியாக சுய கணக்கெடுப்பு பணிகள் கடந்த 17.072026 முதல் 3107.2026 நடைபெற்று வருகிறது. மேலும் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள். விற்பனைக்கூடங்கள் ஆகியவற்றின் கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்வதற்கு மாவட்டத்தின் 31 பொறுப்பு அலுவலகங்களில் எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை இப்பணிக்காக Supervisor களாகவும், Enumerators களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் வரும் 0108.2026 முதல் 30.08.2026 வரை இப்பணியில் ஈடுபட வேண்டியுள்ளதால் அன்னார்கள் இப்பணியினை காலை வேலையிலோ அல்லது மாலை வேலையிலோ மேற்கொள்ள அனுமதி அளிக்க கோரி சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி இப்பணியினை எவ்வித தொய்வுமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்திட ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel