Subscribe Us

Friday, July 31, 2026

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல் - ADW Director Letter


01.03. 2026 அன்றைய நிலையில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குதல் - TET தேர்வில் தேர்ச்சி பெற்ற உதவிக்கல்வி அலுவலர்/பள்ளித்துணை ஆய்வாளர்/நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் /பட்டதாரி ஆசிரியர்கள் / பட்டதாரி காப்பாளர் ஆசிரியர்களின் விவரங்கள் முன்மொழிவுகள் அனுப்பக்கோருதல் தொடர்பாக.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் 108 உயர்நிலைப்பள்ளிகளில் 01.03.2026 அன்றைய நிலையில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடத்தினை நிரப்பிட ஏதுவாக பார்வையில் காணும் செயல்முறையில் )

பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணிமூப்பு பட்டியலில் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற 300 ஆசிரியர்களில் காலிப்பணியிடத்திற்கு ஏற்ப இணைப்பில் காணும் 150 ஆசிரியர்களில், TET (Teacher Eligibility Test) தேர்வில் தேர்ச்சியும், துறைத்தேர்விலும் தேர்ச்சி பெற்று ஒழுங்கு நடவடிக்கை, நீதிமன்ற வழக்குகள், குற்றவியல் வழக்குகள் ஏதும் நிலுவை இல்லாமல் உள்ள தகுதியான உதவிக்கல்வி அலுவலர்/பள்ளித்துணை ஆய்வாளர்/ நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் / பட்டதாரி காப்பாளர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பணிப்பதிவேட்டுடன் இணைத்து 31.07.2026-க்குள் முன்மொழிவு அனுப்பி வைக்குமாறும், தங்கள் மாவட்டத்தில் தகுதியான நபர் எவரும் இல்லையெனில் "இன்மை அறிக்கை"" அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment