JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கல்லூரி மாணவர்களின் படிப்பை AI மூலம் எளிதாக்கும் வகையில், Google தனது Gemini AI plans-ல் சிறப்பு student offer-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தகுதியுள்ள கல்லூரி மாணவர்கள் Google AI Plus subscription-ஐ 12 மாதங்களுக்கு இலவசமாக பெற முடியும். மேலும், Google AI Pro-வும் மாணவர்களுக்கு சிறப்பு விலையில் வழங்கப்படுகிறது.
யார் இந்த offer-ஐ பெறலாம்? எப்படி?
Degree அல்லது certificate வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தற்போது படிக்கும் மாணவர்கள் இந்த offer-க்கு தகுதியானவர்கள். முக்கியமாக, மாணவர்கள் தங்களுடைய student status-ஐ verify செய்ய வேண்டும்.
மாணவர்கள் முதலில் Google-ன் Student Offer page-க்கு சென்று தங்களுடைய personal Google Account மூலம் sign in செய்ய வேண்டும். அங்கு விருப்பமான plan-ஐ தேர்வு செய்து "Get student offer" என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

அதன்பிறகு eligibility verification வரும். Google, மாணவர் உண்மையில் தகுதியுள்ள கல்வி நிறுவனத்தில் படிக்கிறாரா என்பதை SheerID என்ற verification service மூலம் சரிபார்க்கிறது. தேவையான student details-ஐ வழங்கி verification முடிந்ததும், தகுதி இருந்தால் offer-ஐ claim செய்யலாம்.
மாணவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும்
Google AI Plus மூலம் அதிக usage limits கொண்ட Gemini, AI image/video/music tools, 400GB Google One storage, NotebookLM மற்றும் AI-powered study features போன்றவை கிடைக்கும்.
மேலும், Gemini-ல் Study Notebooks, interactive lessons, quizzes, flashcards போன்ற புதிய learning tools அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுடைய பாடக்குறிப்புகள் அல்லது course materials-ஐ upload செய்து, புரிந்துகொள்ள வேண்டிய பகுதிகளை கண்டறிந்து படிப்பதற்கான திட்டத்தையும் உருவாக்க முடியும்.
AI இனி வெறும் பதில் சொல்லும் கருவி மட்டுமல்ல; மாணவர்களின் படிப்புக்கு ஒரு personal study assistant-ஆக மாறுகிறதா? Google-ன் இந்த முயற்சி அதற்கான அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment