இன்றைய செய்திகள் 10.08.2026(திங்கட்கிழமை)



🌹ஏமாறுபவர்கள் முட்டாள்களுமல்ல.!
ஏமாற்றுபவர்கள் புத்திசாலிகளுமல்ல.!
எல்லாம் ஒருநாள் செய்தவர்களுக்கே திரும்பும்.அன்று எல்லாம் புரியும்.!

🌹🌹வாழ்வில் நாம் அடைந்த இன்ப துன்பங்களைக் கூட மறந்துவிடலாம். ஆனால்,நம்மோடு பழகியவர்கள் நமக்கு கற்றுத்தந்த பாடங்களை ஒருபோதும் மறக்கக்கூடாது.!!

🌹🌹🌹நோயின்றி வாழ வேண்டும் என்று நினையுங்கள் ஆனால்,அடுத்தவரை

நோகடித்து வாழ வேண்டும் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🧢🧢தேசிய குடற்புழு நீக்க நாளான இன்று மாநிலம் முழுவதும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்களை நடத்த சுகாதாரத்துறை திட்டம்

👉காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாமில் விடுபட்டவர்களுக்கு வரும் 17ம் தேதி முகாமில் மாத்திரை வழங்க முடிவு.

🧢🧢எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று (ஆக.10) வெளியிடப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு.

👉அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஏற்கனவே தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் ஆக.13ல் தொடங்குகிறது.

🧢🧢அரசு பள்ளிகளில் வசதி குறைவால் மாணவர் சேர்க்கை சரிவு: நிதியை அதிகரிக்க அன்புமணி கோரிக்கை

🧢🧢சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்: பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

🧢🧢சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தனியார் அகாடமி சார்பில் நடந்த ‘சித்ரா நாட்டியம்’ நடன நிகழ்ச்சியில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சுமார் 45 நிமிடங்கள் பரதம் ஆடிய 350 மாணவிகள்

🧢🧢கணக்கெடுப்பு பணிக்கு சென்ற தலைமை ஆசிரியை மீது தாக்குதல்! தொழிலாளி அதிரடி கைது! - நெல்லையில் அதிர்ச்சி

👉பாளையங்கோட்டை வட்டம் கீழநத்தம் கிராமம் செல்வி நகர் பகுதியில் 08.08.2026 (சனிக்கிழமை) முற்பகல் 12 மணி அளவில் முன்னீர்பள்ளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப்பள்ளியின் தலைமையாசிரியராக பணிபுரிந்து வரும் திருமதி சங்கரேஸ்வரி அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியினை மேற்கொண்டுள்ளார்.

👉மேற்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்ளும் பொழுது கதவு எண் 153 செல்வி நகர் என்ற முகவரி முகவரியில் வசித்து வரும் திரு.பெருமாள் மகன் சத்தியமூர்த்தி (வயது 46) என்பவர் கணக்கெடுப்பாளர் சங்கரேஸ்வரி என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்கியும் மரியாதை குறைவாகவும் பேசி உள்ளார்.

👉இதனால் மனம் உடைந்து கடும் வேதனைக்குள்ளான அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

👉இச்செய்தி வருவாய்த் துறையினருக்கு தெரியவர வட்டாட்சியர் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு வழக்கு எண் 565/2026

Sec 126(2) 296(b) 132 115(2) bns 4 of woman harassment act நடவடிக்கை -ன் கீழ் கைது செய்யப்பட்டார்

👉கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தை ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது .

தமிழக அரசே ! திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமே !

மாவட்ட பள்ளிக் கல்வித்துறையே!

👉1.மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடு!

👉2.ஏனைய மாவட்டங்களைப்பின்பற்றிகணக்கெடுப்பு பணியில் உள்ளோருக்குஉரிய பணி மேல் விடுப்பினைஉரிய ஆணையாக வழங்காமல் மெத்தனம் காட்டும் போக்கை கண்டிக்கிறோம்.உடனடியாக உரிய ஆணையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

👉3.குறிப்பிடப்பட்டுள்ளகணக்கெடுப்புக்கான வீடுகளின் எண்ணிக்கையையும் தாண்டி அதிகமாக வழங்கப்பட்டுள்ளோருக்கு உரிய முறையில் பிரித்து பகிர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேற்படி கோரிக்கைகளின் மேல் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட பள்ளி கல்வித்துறை நிர்வாகமும் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

இது தொடர்பாக

இன்று 10.08.2026 திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேரில் முறையிட உள்ளோம்.

தேவைப்பட்டால் போராட்டம் நடத்தவும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு தயாராக உள்ளது.

தோழமையுடன் அழைக்கும்

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு

திருநெல்வேலி.

🧢🧢CPS திட்டத்தில், ஊழியர்களின் கணக்குகளுக்கு நிதியை மாற்றாமல், பங்களிப்பு தொகை செலுத்தப்பட்டு விட்டது போல, ஆவணங்களில் பதிவு. 👉விழுப்புரத்தை சேர்ந்த

ஆர்.சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில், 2000ம் ஆண்டில் நடத்துனராக சேர்ந்து, 2025ல் விருப்ப ஓய்வு பெற்றேன். பங்களிப்பு ஓய்வூதிய தொகை, ஆண்டு ஊதிய உயர்வு, விடுப்பு ஒப்படைப்பு தொகை போன்ற ஓய்வூதிய பலன்கள், இதுவரை எனக்கு வழங்கப்படவில்லை. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.விருப்ப ஓய்வை ஏற்ற பின், நீண்ட காலம் ஓய்வூதிய பலன்களை பெற காத்திருக்கக் கூறுவது சட்டவிரோதம். எனவே, அனைத்து ஓய்வூதிய பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

👉இந்த மனு, நீதிபதி டி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என்.சுரேஷ் ஆஜராகி, "ஊழியர்களிடம் பங்களிப்பு தொகையை பிடித்தம் செய்தும், போக்குவரத்து கழகங்கள் நிர்வாக பங்களிப்பை செலுத்தவில்லை. ஆனால், பங்களிப்பு தொகை முறையாக செலுத்தப்பட்டு விட்டது போல, ஆவணங்களில் பதிவுகள் செய்யப்பட்டு உள்ளன," என்றார்.

👉இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

👉'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஊழியர்களின் கணக்குகளுக்கு நிதியை மாற்றாமல், பங்களிப்பு தொகை செலுத்தப்பட்டு விட்டது போல, ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அது நிதி முறைகேடாக இருக்கலாம்.எனவே, அனைத்து போக்குவரத்து கழகங்களிலும், சி.பி.எஸ்., திட்டத்தில் உள்ள ஊழியர்களின் கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும். அதில் ஊழியர்களின் பங்களிப்பு, நிறுவன பங்களிப்பு முறையாக செலுத்தப்பட்டுள்ளதா; பணம் செலுத்தாமல் பதிவுகளில் வரவு வைக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

👉மேலும், தகுதியான ஊழியர்களுக்கு சி.பி.எஸ்., தொகை வழங்கப்பட்டு உள்ளதா என்பதை சரிபார்த்து, போக்குவரத்து துறை செயலர், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், ஆக., 27ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

🧢🧢தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் சனிக்கிழமை தரிசனம் செய்தேன்

நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் அருளுமாறு பகவானிடம் வேண்டினேன்

மத்திய அமைச்சர் அமித்ஷா பதிவு

🧢🧢அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

கனமழை, பாதைகளைச் சீரமைக்கும் பணிகள் மற்றும் மோசமான வானிலை முன்னறிவிப்பு காரணமாக,

பஹல்காம் மற்றும் பால்தால் ஆகிய இரு பாதைகளிலும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

🧢🧢தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத் தலைவராக மணிப்பூர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமனம்

🧢🧢ஆகஸ்ட் 13 வரை தென்னிந்தியாவில் மழை!

கேரளா, கடலோர கர்நாடகாவில் கனமழை தொடரும் நிலையில், தமிழகத்திலும் ஆகஸ்ட் 13 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக IMD தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 9 முதல் 14 வரை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

இந்திய வானிலை ஆய்வு மையம்

🧢🧢UPI சேவை இலவசமாகவே தொடரும்.."! -PhonePe CEO உறுதி

இந்திய நுகர்வோருக்கு UPI பரிவர்த்தனைகள் எப்போதும் முற்றிலும் இலவசமாகவே தொடரும் என PhonePe CEO சமீர் நிகாம் உறுதி!

மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வரி திருத்த மசோதாவால், UPI கட்டணம் வசூலிக்கப்படலாம் என தகவல் பரவிய நிலையில் விளக்கம்

🧢🧢கேரள மக்கள் சினிமாவையும் அரசியலையும் பிரித்து பார்க்க தெரிந்தவர்கள்..

தமிழக முதலமைச்சர் விஜயின் திரைப்படங்களை கேரளத்தில் அனைவரும் ரசித்துப் பார்ப்பார்கள்.

அவருக்கு அங்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால், இங்கு தேர்தலில் விஜய் நின்றால் வாக்களிக்க மாட்டார்கள்.

கேரள மக்கள் சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க தெரிந்தவர்கள்.

எம்.கே. பைஸி, SDPI கட்சியின் தேசிய தலைவர். 🧢🧢ஐபோன் மூலம் அரோராவை படம்பிடித்து பகிர்ந்த விண்வெளி வீரர் அனில் மேனன்

பூமிக்கு மேல் ஒளிரும் 'அரோரா' எனப்படும் துருவ ஒளியை படம்பிடித்து பகிர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனன்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் அனில் மேனன், இதை ஐபோன் மூலம் படம் பிடித்ததாக கூறியுள்ளார்

பார்ப்பதற்கு நமது இந்திய தேசியக்கொடி போல் உள்ளது

🧢🧢“பல பிரச்னைகளில் திமுகவும் அதிமுகவும் மாநில நலனுக்காக ஒருமித்த கருத்துடனே இருந்துள்ளன.

மேகதாது விவகாரத்தில் மட்டுமல்ல, பல பிரச்னைகளில் திமுகவும் அதிமுகவும் மாநில நலனுக்காக ஒருமித்த கருத்துடனே இருந்துள்ளன. தவெகதான் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார்களே தவிர இது வழக்கமான நடைமுறைதான்.

திமுக, அதிமுக எம்.பி.க்கள் தொகுதி மறுவரையறை ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது குறித்து

திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

🧢🧢குலசேகரப்பட்டினம் ஏவுதளம் - தனியாருக்கு ஒப்படைக்கும் மத்திய அரசு

தூத்துக்குடி - குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ அமைத்து வரும் ராக்கெட் ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கிறது மத்திய அரசு!

ரூ.986 கோடியில் அமையும் இந்த ஏவுதளத்தை முழுமையாக நிர்வகிக்கவும், ராக்கெட்டுகளை ஏவுவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு.

🧢🧢அதிமுகவில் இருந்து சென்ற சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு த.வெ.க.வில் பொறுப்புகள் அறிவிப்பு.

👉அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கட்சிப் பதவிகள் அறிவிப்பு

👉புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நியமனம்

👉கரூர் மாவட்ட அமைப்பு செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நியமனம்

👉தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளராக இசக்கி சுப்பையா நியமனம்

👉த.வெ.க துணைப் பொதுச்செயலாளர்கள் அறிவிப்பு

எம்.ஆர். விஜயபாஸ்கர், மதுராந்தகம் மரகதம் குமரவேல் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமனம்

🧢🧢கேரள காங்கிரஸ் அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடுவதா?”

சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாக பாட காங்கிரஸ் அரசு உத்தரவிட்டிருப்பது நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது என்றும் கண்டிப்பு.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926
Share:

No comments:

Post a Comment

Subscribe Us

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel

Categories