ஆசிரியர் தகுதி தேர்வு (TET) 3.8.2026 அன்று விசாரணைக்கு வந்த வழக்கின் நிலை

HIGH COURT MADURAI BENCH ORDER, DATE:03-08-2026 உயர்நீதிமன்ற மதுரை கிளையில்,

மதுரை மாவட்டம் பேரையூர் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி ஆசிரியர் திரு S பாலமுருகன்(இடைநிலை ஆசிரியர் ) அவர்களும்(வழக்கு எண் WP(MD) No. 20868/2026),

மதுரை மாவட்டம சொக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் திரு ஆ சுப்பிரமணியன், திரு க இராஜேஸ்வரன் ,விருதுநகர் மாவட்டம் கிழவிகுளம் அரசு மேனிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு க மணிமுத்து ( வழக்கு எண் WP(MD) No. 20869/2026 ) ஆகியோர் தொடுத்த

ஆசிரியர் தகுதி தேர்வு(TET) வழக்கு இன்று 03-08-2026 ( திங்கள்கிழமை ) நீதிமன்ற அறை எண் 07 இல் மாண்புமிகு நீதியரசர் மும்மினேனி சுதீர்குமார் முன்னிலையில் 27 வது வழக்காக நண்பகல் 12:10 மணிக்கு விசாரணைக்கு வந்தது .

அரசு தரப்பு சார்பில் ஆஜரான TRB வழக்கறிஞர் திரு அம்ஜத்கான் அவர்கள் NCTE&உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின்படியே ஆசிரியர் தகுதி தேர்வு(TET) நடத்தப்படுகிறது. ஆகவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கடந்த முறை சொன்னதையே திரும்பவும் வாசித்தார்.

ஆசிரியர்கள் தரப்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் திரு பன்னீர்செல்வம் அவர்கள், வழக்கு தொடுத்துள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது கொள்கை முடிவு தமிழக அரசுதான் எடுக்க வேண்டும், TRB ஐ பொறுத்தவரை தேர்வு நடத்துவது மட்டுமே அவர்களின் வேலை, இந்த வழக்கில் TRB க்கு எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும்

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களுக்கு ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஆசிரியர்கள் தரப்பு வழக்கறிஞர் திரு பன்னீர்செல்வம் அவர்கள் வாதாடினார்.

ஆசிரியர்கள் கோரிக்கைகள் மீது நியாயம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்ட மாண்புமிகு நீதியரசரர் அவர்கள்.

வழக்கு எண் WP(MD) No. 20868/2026 இல் உயர்நிலை/மேனிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியரின் கோரிக்கை மீது 8 வாரங்களுக்குள் முடிவெடுக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவு.

அரசு உயர்நிலை, மேனிலைப்பள்ளிகளில் 6-8 வகுப்புகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை ஆசிரியர் தகுதி தேர்வில் அவர்களின் பணிக்கு சம்பந்தம் இல்லாத 1-5 வகுப்புகளுக்கான தாள் -1 ஐ எழுத கட்டாயப்படுத்துவதும், 6-8 வகுப்புகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் தாள் - 2 இல் எந்த பாடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதும் தெளிவாக இல்லை, ஆகவே 6-8 வகுப்புகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை சரிசெய்யவும் அல்லது மனுதாரரின் கோரிக்கையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு TETக்கு நிகரான பணியிடைப்பயிற்சி வழங்குவது குறித்தும் 8 வாரங்களுக்குள் பள்ளிக்கல்வித்துறை *செயலர் முடிவெடுக்க வேண்டும் என மாண்புமிகு நீதியரசர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் பாடத்தில் தேர்வு, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண்ணில் சம தளர்வு, 9&10 வகுப்பு கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET விலக்கு சார்ந்த வழக்கு எண் WP(MD) No. 20869/2026 ஆனது

*மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மதிப்பெண் தளர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் சார்ந்த வழக்கு 24-08-2026 அன்று விசாரணைக்கு வர இருப்பதால், அரசு தரப்பில் அவ்வழக்குகளில் கொள்கை முடிவு எடுப்பது/பதில் அளிப்பதை பொறுத்து, இவ்வழக்கை விசாரிப்பதற்கு வசதியாக வழக்கு விசாரணையை செப்டம்பர் 2 க்கு ஒத்தி வைத்து மாண்புமிகு நீதியரசர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் என்பதை அனைத்து மூத்த ஆசிரியர் சொந்தங்களுக்கும் அன்புடன்* *தெரிவித்துக்கொள்கிறோம்.
Share:

No comments:

Post a Comment

Subscribe Us

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel

Categories