விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்; இந்திய ரிசர்வ் வங்கி புதிய முயற்சி

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வர இருப்பதாகத் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. தற்போது இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முதற்கட்ட சோதனை முயற்சியாக ரூ.100 கோடி மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி வெற்றி பெரும் பட்சத்தில் வருங்காலத்தில் அனைத்து ரூபாய் நோட்டுகளும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளாக மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், பழைய காகித ரூபாய் நோட்டுகளைத் தடை செய்யும் திட்டம் தற்போதைக்கு எதுவும் இல்லை எனவும், இந்த புதிய பிளாஸ்டிக் நோட்டுகள் மற்றும் பழைய காகித நோட்டுகள் இணையாகப் புழக்கத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் நீண்ட ஆயுட்காலம் கொண்டவை. இது எளிதில் சேதமடையாது. இதில் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால், போலி ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது மிகவும் கடினம் என்றும் கூறப்படுகிறது. மக்களிடத்தில் அதிக அளவில் புழக்கத்தில் உள்ள 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் எளிதில் சேதமடைவதால், இந்திய ரிசர்வ் வங்கி இந்த ரூபாய் நோட்டுகளை அடிக்கடி அச்சடிக்கும் கட்டாயம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கவே, எளிதில் கிழியாத, அதிக ஆயுட்காலம் கொண்ட பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு பயன்பாடுகள் ஆஸ்திரேலியா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share:

No comments:

Post a Comment

Subscribe Us

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel

Categories