சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிநவம் மற்றும் ஏற்காடு ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிட, தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தது: ன்றன.
மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிநவம் மற்றும் ஏற்காடு ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிட, தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தது:
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிநவம் மற்றும் ஏற்காடு அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 2026-2027 ஆம் ஆண்டில் காலியாக உள்ள பட்டதாரி/முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத காலிப் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிடும் பொருட்டு, பணி நாடுநா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எஸ்சி மற்றும் எஸ்டி இனத்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி, ஸ்போக்கன் இங்கிலிஷ் (முதுநிலை பட்டப்படிப்பு ) பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 18 ஆயிரத்தில் அபிநவம் மற்றும் ஏற்காடு பள்ளிகளுக்கு தலா 1 என 2 காலிப் பணியிடங்களும், ஸ்போக்கன் இங்கிலிஷ் (இளநிலை படிப்பு) பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 15 ஆயிரத்தில் அபிநவம் மற்றும் ஏற்காடு பள்ளிகளுக்கு தலா 1 என 2 காலிப் பணியிடங்களும், இசை பயிற்றுநா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 15 ஆயிரத்தில் அபிநவம் மற்றும் ஏற்காடு பள்ளிகளுக்கு தலா 1 என 2 காலிப் பணியிடங்களும், கலை பயிற்சியாளா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 15 ஆயிரத்தில் ஏற்காடு பள்ளிக்கு 1 காலிப் பணியிடமும், கவுன்சிலா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 15 ஆயிரத்தில் அபிநவம் மற்றும் ஏற்காடு பள்ளிகளுக்கு தலா 1 என 2 காலிப் பணியிடங்களும், செவிலியா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 15 ஆயிரத்தில் அபிநவம் மற்றும் ஏற்காடு பள்ளிகளுக்கு தலா 1 என 2 காலிப் பணியிடங்களும், இளநிலை உதவியாளா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 13 ஆயிரத்தில் அபிநவம் பள்ளிக்கு 2 மற்றும் ஏற்காடு பள்ளிக்கு 1 என 3 காலிப் பணியிடங்களும், ஓட்டுநா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 15 ஆயிரத்தில் அபிநவம் பள்ளிக்கு 1 காலிப் பணியிடமும், அலுவலா் உதவியாளா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 10,400-இல் ஏற்காடு பள்ளிக்கு 1 காலிப் பணியிடமும், துப்புரவு பணியாளா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 7 ஆயிரத்தில் ஏற்காடு பள்ளிக்கு 1 காலிப் பணியிடமும் உள்ளது











No comments:
Post a Comment