Subscribe Us

Thursday, August 27, 2026

எம்.பி.பி.எஸ் கிடைக்கலையா? வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் இந்த படிப்புகளை டிரை பண்ணுங்க

ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை சம்பளம்; மருத்துவ கனவை அடைய முடியாதவர்கள் இந்த படிப்புகளை முயற்சி செய்யலாம்; நிபுணரின் முழு விளக்கம் இங்கே
மருத்துவராக முடியவில்லை என்பவர்களுக்கு மாற்று வாய்ப்பாக மருத்துவம் சார்ந்து பொறியியல் துறையில் சிறந்த வேலை வாய்ப்பை வழங்கும் படிப்புகள் குறித்த முழு விபரங்களை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மறுபுறம் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 12 ஆம் வகுப்புக்கு பிறகு மருத்துவம் சார்ந்து படிக்க விரும்புபவர்களின் பெரும் கனவு எம்.பி.பி.எஸ் படிப்பு தான். ஆனால் இதற்கு நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும். அதேநேரம் நீட் மதிப்பெண் இல்லாமல், மருத்துவம் சார்ந்து பொறியியல் துறையில் சில படிப்புகள் உள்ளன. இவற்றிற்கு சிறந்த எதிர்காலமும் உள்ளன.

இந்தப் படிப்புகள் குறித்து முழு விளக்கத்தை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கியுள்ளார். அதன்படி, நீட் தேர்வை ஆண்டுதோறும் 24 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். ஆனால் 1.1 லட்சம் எம்.பி.பி.எஸ் இடங்களே இந்தியாவில் உள்ளன. எனவே கடினமான போட்டி உள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed