SMC - பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நாளை ( 29.8.2026 ) நடத்தும் வழிமுறைகள் :

i. பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டமானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும்.
ii. பெற்றோர் அனைவரையும் கூட்டத்திற்கான தலைமையாசிரியர் நோக்கத்தை எடுத்துக்கூற வரவேற்றுக் வேண்டும். இதுதொடர்பான காணொளிகளை கொடுக்கப்பட்டுள்ள QR Code மற்றும் Link வாயிலாக பதிவிறக்கம் செய்து காட்சிப்படுத்தலாம்.
iii. ஆசிரியர் பிரதிநிதி ஒருவர் பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் அதன் முக்கியப் பணிகள் குறித்துச் சுருக்கமாக எடுத்துக் கூற வேண்டும்.
iv. கடந்த இரண்டாண்டுகளாக (2024-26) பள்ளி மேலாண்மைக் குழு மேற்கொண்ட பணிகள் குறித்துத் தற்போதைய பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் எடுத்துரைக்க தலைமையாசிரியர் கேட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக,
a. எத்தனை கூட்டங்கள் நடைபெற்றன?
b. எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன?
C. எத்தனை தீர்மானங்களுக்கு தீர்வு காணப்பட்டன?
d. எத்தனை தீர்மானங்கள் நிலுவையில் உள்ளன? போன்ற தகவல்களைப் பெற்றோர்களிடையே பகிர்ந்துகொள்ள வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவரின் அறிக்கைப் பகிர்வினைத் தொடர்ந்து கடந்த இரண்டாண்டுகள் (2024-26) பணியை சிறப்பாக நிறைவு செய்தமைக்காக தற்போதைய பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பாராட்டு நிகழ்வை தலைமையாசிரியர் முன்னின்று நடத்த வேண்டும். பாராட்டு நிகழ்வின்போது தலைவர், துணைத் தலைவர், கல்வியாளர் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அழைக்கலாம்.
vi. தொடர்ந்து, 2026-28 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு மற்றும் புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வுகள் குறித்துத் தலைமையாசிரியர் அல்லது பள்ளியின் ஆசிரியர் பிரதிநிதி பெற்றோர்களிடையேத் தெளிவாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
vii. பெற்றோருக்கு எழும் சந்தேகங்கள், கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளித்து மறுகட்டமைப்பு நிகழ்வில் முறையில் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க வேண்டும்.
viii. இறுதியாக, கூட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர்கள் அனைவருக்கும் தலைமையாசிரியர் நன்றி கூறி கூட்டத்தைத் தேசிய கீதத்துடன் நிறைவு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment