Search This Blog

Wednesday, September 9, 2026

சிறப்பு டெட் தேர்வு மதிப்பெண் குறைப்பு அதிகாரிகள் முட்டுக்கட்டை என புகார்

0 comments


சிறப்பு டெட் தேர்வு மதிப்பெண் குறைப்பு அதிகாரிகள் முட்டுக்கட்டை என புகார் - தினமலர் செய்தி

சிறப்பு 'டெட்' தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைப்புக்கு அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என ஆசிரியர்கள் புலம்புகின்றனர். கட்டாயக் கல்வி உரி மை சட்டத்தின்படி பணியில் உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களும் 'டெட்' தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் 3.28 லட்சம் ஆசிரியர்கள் பணி கேள்விக்குறியானது.

அவர்களுக்கு ஜூலை 4, 5ல் சிறப்பு 'டெட்' தேர்வு நடத்தப்பட்டது. 1.60 லட்சத்திற்கும் மேல் எழுதினர். முடிவு இன்னும் வெளியாகவில்லை. தேர்வு மிக கடினமாக இருந்ததால் ஆசிரியர்களின் பணி அனுபவத்தை கருத்தில்கொண்டு தேர்ச்சி மதிப்பெண்ணை 33 சதவீதமாக குறைக்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என சங்கங்கள் வலியுறுத்தின . தமிழ்நாடு ஆசிரியர்கள் பாதுகாப்பு கூட்டு இயக்கம் (ஜாக்பாட்) மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:

த.வெ.க., ஆட்சி அமைந்ததும் அமைச்சர் ராஜ்மோகனிடம் 'ஜாக்பாட்' சார்பில் கோரிக்கை வைத்தோம். இதன் எதிரொலியாக 'டெட்' தேர்வுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க கோரி தனித் தீர்மானம் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டது.

ஆசிரியர்களுக்கு ஆதரவாக தேர்ச்சி மதிப்பெண்ணையும் குறைக்க அரசு பரிசீலிக்கிறது. ஆனால் தி.மு.க., ஆட்சியில் இருந்த அதிகாரிகள் அதே மனநிலையில் இருந்து முட்டுக்கட்டையாக உள்ளனர். முதல்வர் விஜயை சந்தித்து சங்கங்கள் முறையிட முடிவு செய்துள்ளன என்றார்.

No comments:

Post a Comment