2026-27 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக "சொல்! வெல்!" என்னும் புதிய அடையாளத்துடன் வினாடி-வினா மன்றம் வலுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.
வகுப்பறை செயல்பாடுகள்:
வினாடி-வினா போட்டிகளை வெறும் நினைவாற்றல் சோதனையாக இல்லாமல், மாணவர்கள் "என்ன?", "ஏன்?", "எப்படி?" எனச் சிந்தித்து அறிவைப் பெறும் கற்றல் தளமாக மாற்றி அமைத்திடல் வேண்டும்.
EMIS தளம் மூலம் கற்றல் வளங்கள்:
அனைத்து மாணவர்களுக்கும் சமமான பயிற்சி வழங்கும் வகையில், தரப்படுத்தப்பட்ட கற்றல் வளங்கள் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்; இதனைப் பள்ளியின் பொறுப்பாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
பாடவேளை மற்றும் பொறுப்பாசிரியர்:
ஒவ்வொரு மாதமும் ஒரு பாடவேளையைக் கட்டாயமாக வினாடி-வினா மன்றச் செயல்பாட்டிற்காக ஒதுக்க வேண்டும்; மேலும், ஒவ்வொரு வகுப்பு மற்றும் பிரிவிற்கும் ஒரு ஆசிரியர் மன்றப் பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட வேண்டும்.
மகிழ் முற்றம் குழுக்கள்:
வகுப்பறை வினாடி-வினா செயல்பாடுகளை மாணவர்களின் "மகிழ் முற்றம்" குழுக்களின் அடிப்படையில் நடத்தி, சுற்றுகள் வாரியாகப் புள்ளிகளைப் பதிவு செய்து மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
புகைப்படங்களைப் பகிர்தல்:
பள்ளி அளவிலான செயல்பாடுகளின் புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களை clubs@tnschools.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Quiz Club 2026-27 - DSE Proceedings - Pdf 👇👇👇










No comments:
Post a Comment