BC MBC minority scholarship: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
/indian-express-tamil/media/media_files/2026/05/07/tamil-nadu-agricultural-university-admission-tnau-online-application-link-tnau-ug-admission-2026-2026-05-07-09-33-41.jpg)
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பு: உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் கல்லூரி கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியானவர்கள் அக்டோபர் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான பிரதமரின் போஸ்ட்-மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தை அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இயங்கும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் தகுதியான மாணவ-மாணவிகள் பெறலாம். அரசு நிர்ணயித்த தகுதி வரம்புகளின் அடிப்படையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
யார் விண்ணப்பிக்கலாம்?
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை (UG) படிக்கும் மாணவர்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்கள்.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளைத் தொடரும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த மேலாண்மை தகவல் அமைப்பு (UMIS) இணையதளமான umis.tn.gov.in மூலமாகத் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்கள் தங்களது கல்லூரிகளில் உள்ள உதவித்தொகை ஒருங்கிணைப்பாளரைத் தொடர்புகொண்டு, இந்த இணையதளம் வாயிலாக உரிய முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாளாக அக்டோபர் 21 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விளக்கங்களைப் பெற விரும்பும் மாணவர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலரை நேரில் அணுகிப் பயன்பெறலாம். தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி, காலக்கெடு முடிவதற்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.










No comments:
Post a Comment