Thamizhkadal WhatsApp Channel

சொத்து, கடன் விவரங்களை அக்டோபர் 31-க்குள் தாக்கல் செய்க; பள்ளிக் கல்வித் துறை உத்தரவு


குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்கத் தவறும் ஊழியர்கள், 1973-ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை மீறியவர்களாகக் கருதப்படுவர்; பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு ஊழியர்கள், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் திட்டம் (Integrated Financial and Human Resources Management System - IFHRMS) இணையதளம் வாயிலாக தங்களது வருடாந்திர சொத்து மற்றும் கடன் கணக்கு விவரங்களை அக்டோபர் 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆகஸ்ட் 5, 2026 தேதியிட்ட சுற்றறிக்கையில் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை இதனை ஊழியர்களுக்குச் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின் விதி 7 (3)-ல் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, அகில இந்திய சேவை (AIS) அதிகாரிகளைத் தவிர்த்து, பிற அரசு ஊழியர்கள் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களை இணையதளம் வாயிலாக ஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973 இல் விதி 7(3) இன்படி அசையும் /அசையா சொத்துக்கள் மற்றும் கடன் பொறுப்புகள் குறித்த விவரங்களை ஒருங்கிணைந்த மனித வள நிதி மேம்பாட்டுத்திட்டம் IFHRMS களஞ்சியம் செயலி வாயிலாக, 31.10.2026 தேதிக்குள் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரத்தினை கனிவுடன் தெரிவித்துக் கொள்வதுடன், அக்கடித நகலினை இத்துடன் இணைத்தனுப்பி வைக்கிறேன். அரசு கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் அனைத்து இணை இயக்குநர்கள் /துணை இயக்குநர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஆகியோர் IFHRMS ID Number / Password உபயோகித்து தத்தமது அசையும் /அசையா சொத்துக்கள் மற்றும் கடன் பொறுப்புகள் குறித்த விவரங்களை IFHRMS களஞ்சியம் செயலியில் 31.10.2026 க்குள் தவறாமல் உள்ளீடு செய்து அதன் விவரத்தினை இவ்வியக்கத்திற்கு தெரிவிக்கும்படி கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

IFHRMS இணையதளத்தில் பல்வேறு வகையான சொத்துக்கள் மற்றும் கடன்களைப் பதிவு செய்ய தனித்தனி படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன:

படிவம் I (Form I): நிலம், கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துக்களின் விவரங்கள்.

படிவம் II (Form II): இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், நகைகள் மற்றும் வங்கி வைப்புத்தொகை (டெபாசிட்) உள்ளிட்ட அசையும் சொத்துக்களின் விவரங்கள்.

படிவம் III (Form III): கடன்கள் மற்றும் பிற பொறுப்புகள் பற்றிய விவரங்கள்.

ஊழியர்கள் இந்த மூன்று படிவங்களையும் பூர்த்தி செய்து, விவரங்களைச் சரிபார்த்து, உறுதிப்படுத்தி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பதிவிறக்கம் செய்து தங்களின் சான்றாக வைத்துக் கொள்ளலாம்.

ஊழியர்களின் வருடாந்திர ரகசிய அறிக்கையில் (Annual Confidential Report) இந்த அறிக்கையைச் சமர்ப்பித்த தேதி குறிப்பிடப்படும். பதவி உயர்வுப் பட்டியலை (Promotion Panels) தயாரிக்கும்போதும் இது கணக்கில் கொள்ளப்படும்.

இனிவரும் காலங்களில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 நிலவரப்படியான சொத்து மற்றும் கடன் விவரங்களை, அடுத்த காலண்டர் ஆண்டின் மார்ச் 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் (உதாரணமாக, 2026-ஆம் ஆண்டிற்கான விவரங்களை மார்ச் 31, 2027-க்குள் தாக்கல் செய்ய வேண்டும்). ஊழியர்கள் தங்களது IFHRMS உள்நுழைவு விவரங்களை (Login credentials) பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, குறித்த நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories