பணி அனுபவத்தை கணக்கில் கொண்டு மதிப்பெண் வழங்க

சிறப்பு டெட் தேர்வில்13/10/26 அரசுப் பணியில் பணியாற்றிவருகின்ற ஆசிரியர்களின் பணி அனுபவத்தை கணக்கில் கொண்டு மாண்பமை தமிழ்நாட்டு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் ஆணை பிறப்பிக்க வேண்டுதல் சார்பு பணிவு மடல்!

அனுப்புனர்

முனைவர் இரா தண்டபாணி 
பட்டதாரி தமிழாசிரியர்,
பி ஏ கே பழனிசாமி மேல்நிலைப் பள்ளி 
பழைய வண்ணாரப்பேட்டை சென்னை 21.

பெறுநர்

மாண்பமை
தமிழ்நாட்டு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள்,
தமிழ்நாட்டரசின் தலைமைச் செயலகம்,
புனித ஜார்ஜ் கோட்டை சென்னை 09.

பொருள்: ஆசிரியர்களின் சிறப்பு டெட் தேர்வில் ஆசிரியர்களின் பணி அனுபவத்திற்கு மதிப்பெண் வழங்கும் அரசாணை பிறப்பிக்க வேண்டுதல் சார்பாக..

மாண்புடையீர்!பணிவான வணக்கம்.

மாற்றங்களை வேண்டி புது மாற்றங்களைத் தர வந்திருக்கும் அன்பு சார் பெருந்தகை எங்கள் பாசமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுக்கு பணிவான வணக்கம்.

தற்போது அரசுப் பணியில் பல ஆண்டுகளாகப்பணி அனுபவம் பெற்ற ஆசிரியர்களின் சிறப்பு டெட் தேர்விற்கு மாண்பமை தமிழ்நாட்டு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் சிறப்பு மதிப்பெண்கள் வழங்கியும், மாணவர் நலனுக்காக இலக்கிய சார் விருதுகளையும், பரிசுகளையும் மாணவர்களைப் பெற உழைத்து ஊக்கப்படுத்திய ஆசிரியர்களுக்கும் சிறப்பு மதிப்பெண்கள் வழங்கிடும் அரசாணையைப் பிறப்பித்து உதவிட வேண்டுமாறு பணிவன்போடு வேண்டுகிறோம். நன்றி!

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள, 
முனைவர்இரா. தண்டபாணி,
பட்டதாரி தமிழாசிரியர், 
மேனாள் மாவட்டஇணைச்செயலாளர் 
 தமிழகத் தமிழாசிரியர் கழகம்.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories