Thamizhkadal WhatsApp Channel

தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பதற்கு அரசு ஆசிரியர்கள் என்ன மிஷின்களா?..


தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையால், அரசு ஆசிரியர்கள் ஏற்கனவே கூடுதல் பணிச்சுமையில் சிக்கித் தவிக்கும் நிலையில், காலை மற்றும் மதிய உணவுகளை தரம் பரிசோதிக்கும் பணியையும் அவர்கள் மீதே சுமத்தினால், எப்படி சமாளிப்பார்கள்?.

தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பதற்கு அரசு ஆசிரியர்கள் என்ன மிஷின்களா? ஆசிரியர்கள் மீது கூடுதல் பணிச்சுமையை சுமத்துவதை விட்டு விட்டு, அரசுப் பள்ளிகளில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அதுமட்டுமன்றி காலை மற்றும் மதிய உணவு திட்டங்களை கண்காணிக்க வெவ்வேறு ஆசிரியர்களை நியமித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories