THIRAN Plus - Tagging மற்றும் மதிப்பெண் பதிவேற்றத்தில் செய்த தவறை மாற்றுவது எப்படி? - Option Enabled Now


Dear team,


EMIS team has confirmed that Editing option is now enabled in Thiran+ student tagging and mark entry.

Please note student tagging entry can be *edited only up to 10 times* for a student.

Please inform the schools to use the feature, resolve the tagging issues and complete mark entry.

1. EMIS இணையதளத்தில் லாகின் செய்தல்
கூகுள் குரோம் பிரவுசரை ஓபன் செய்து EMIS அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

பள்ளியின் 11 இலக்க UDISE+ குறியீட்டு எண்ணை 'User Name' மற்றும் 'Password' கட்டங்களில் உள்ளிட்டு லாகின் செய்யவும்.

முக்கிய குறிப்பு: மொபைல் மூலம் லாகின் செய்பவர்கள், பிரவுசரின் வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து 'Desktop Site' ஆப்ஷனை கட்டாயமாக எனேபிள் செய்து கொள்ள வேண்டும்.

2. திறன் டேக்கிங் 'No'-ல் இருந்து 'Yes' ஆக மாற்றுவது எப்படி?

பள்ளியின் முகப்புப் பக்கம் (Dashboard) திறந்தவுடன், இடப்பக்க மெனுவில் கொடுக்கப்பட்டுள்ள 'திறன் அசஸ்மெண்ட்' (Thiran Assessment) என்ற ஹெட்டிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதன் தொடர்ச்சியாகக் கீழே தோன்றும் விபரங்கள் இதோ:

வகுப்பு மற்றும் செக்ஷன் தேர்வு: மெனுவில் 'திறன் பிளஸ்' என்பதன் கீழ் உள்ள 'ஸ்டுடெண்ட் டேக்கிங்' (Student Tagging) ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்னர், 'Select Class' என்ற டவுன் ஏரோவை கிளிக் செய்து எந்த வகுப்பிற்குத் தவறுதலாகப் பதிவிட்டீர்களோ அந்த வகுப்பையும், அதன் 'Section' ஐயும் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். தற்பொழுது அந்த வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் பெயர்களும் பட்டியலிடப்படும்.

பென்சில் சிம்பல் திருத்தம்: நீங்கள் தவறுதலாக 'No' என்று பதிவிட்ட மாணவரின் பெயருக்கு நேராக, கடைசியாக உள்ள 'Action' பகுதிக்கு அருகில் ஒரு பென்சில் சிம்பல் (Edit icon) இருக்கும். அதை கிளிக் செய்யவும்.

ரீடேக் கவுண்ட் மற்றும் சப்மிட்: பென்சில் சிம்பலை கிளிக் செய்ததும் 'திறன் டேக்' என்ற விண்டோ தோன்றி, மாணவரின் பெயர், யூசர் ஐடி மற்றும் 'Tag Remaining Count' (நாம் எத்தனை முறை மாற்றியமைக்கலாம் என்ற எண்ணிக்கை) ஆகியவை காட்டும். அதில் கீழே உள்ள 'Submit' பட்டனை கிளிக் செய்யவும். தற்பொழுது ஏற்கனவே 'No' என்று இருந்த பதிவு தானாக 'Yes' என்று மாறிவிடும். (ஒருவேளை தவறுதலாக 'Yes' என்று கொடுத்திருந்தாலும், இதே முறையில் பென்சில் சிம்பலை கிளிக் செய்து 'No' ஆக மாற்றிக் கொள்ளலாம்).
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories