
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.11.2026
.jpg)
பிடல் காஸ்ட்ரோ
இயல் : அரசியல்
அதிகாரம்:55.செங்கோன்மை
குறள் எண்:547
குறள்:
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
பொருள்:
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
The early bird catches the worm.
முதலில் விழிக்கும் பறவைக்கே இரை கிடைக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. பேப்பர், உணவு அடைக்கப்பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை தெருவிலோ அல்லது பள்ளி வளாகத்திலோ வீசாமல் குப்பை தொட்டியில் மட்டுமே போடுவேன்.
2. நெகிழி பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.
பொன்மொழி :
நம்முடைய எண்ணங்கள் உயர்ந்ததாக இருந்தால், நம் செயல்கள் சிறந்ததாக இருக்கும்; நம் செயல்கள் சிறந்ததாக இருந்தால், நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்.
Thought for the Day :
Noble thoughts lead to good actions; good actions lead to a meaningful life.
பொது அறிவு :
1.இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி அடிப்படை உரிமைகளை பற்றியது?
பகுதி III.
2. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது எந்த சரத்தில் வருகிறது?
சரத்து 14.
English words :
1. Cautious - எச்சரிக்கையான - Careful
2. Meager - குறைவான - Scanty
புவியியலும் சுற்றுசூழலும் :
தமிழ்நாட்டின் கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது.
* தென்கிழக்குப் பகுதியில் மன்னார் வளைகுடா காணப்படுகிறது.
* தெற்குப் பகுதியில் பாக் நீரிணை மற்றும் இந்தியப் பெருங்கடல் சார்ந்த கடற்பகுதிகள் உள்ளன.
* தமிழ்நாடு நீண்ட கடற்கரையைக் கொண்ட இந்திய மாநிலங்களில் ஒன்றாகும்.
NMMS :
MAT
கடிகாரக் கோணம்
ஒரு கடிகாரத்தில் நேரம் சரியாக 3:00 மணியாக இருக்கும் போது, மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடைப்பட்ட கோணம் எவ்வளவு?
A60°
B90°
C120°
D180°
விடை: 90°
நவம்பர் 25
நீதிக்கதை
காலையில் உதவும் குழந்தைகள்!
ஒரு அழகான கிராமத்தில் கீதா, சுதன் என்ற இரண்டு குழந்தைகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கும் அண்ணன், தங்கை.
ஒவ்வொரு நாளும் காலையில் அவர்களுடைய அம்மா சமையல் செய்வது, மதிய உணவைக் கட்டிக் கொடுப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது என்று பல வேலைகளை அவசர அவசரமாகச் செய்து கொண்டிருப்பார். அப்பாவும் வேலைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருப்பார்.
ஆனால் கீதாவும் சுதனும் காலையில் எழுந்ததும் தங்களுடைய வேலைகளை மட்டும் பார்த்துக் கொள்வார்கள். பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் அம்மாவிடம்,
"அம்மா! என் தண்ணீர் பாட்டில் எங்கே?" "அம்மா! என் சாக்ஸ் எங்கே?" "அம்மா! என் லஞ்ச் பாக்ஸ் எங்கே?"
என்று அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஒருநாள் காலையில் அம்மா மிகவும் அவசரமாகச் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சுதன் கேட்டான்.
"அம்மா! என்னுடைய ஷூ பாலிஷ் எங்கே?"
அம்மா ஒரு வேலையை முடித்துவிட்டு இன்னொரு வேலையைச் செய்ய ஓடிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த கீதாவுக்கு அம்மாவின் சிரமம் புரிந்தது.
உடனே கீதா, "சுதன்! நாம் ஏன் அம்மாவுக்கு உதவி செய்யக்கூடாது? நான் சாப்பாட்டு மேசையைச் சுத்தம் செய்கிறேன். நீ நம்முடைய புத்தகங்களையும் பைகளையும் சரியாக எடுத்து வைக்கிறாயா?" என்றாள்.
சுதனும் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டான்.
கீதா சாப்பாட்டு மேசையைச் சுத்தம் செய்தாள். சுதன் இருவருடைய பள்ளிப் பைகளையும் எடுத்துத் தயாராக வைத்தான். இருவரும் தங்களுடைய தண்ணீர் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி, காலணிகளையும் ஒழுங்காக எடுத்து வைத்தனர்.
இதையெல்லாம் பார்த்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அம்மா அன்புடன், "குழந்தைகளே! நீங்கள் எனக்கு உதவி செய்ததால் இன்று காலையில் என்னுடைய வேலைகள் மிகவும் எளிதாக முடிந்துவிட்டன. குடும்பம் என்பது அனைவரும் சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதும்தான்!" என்றார்.
அன்றிலிருந்து கீதாவும் சுதனும் காலையில் தங்களுடைய வேலைகளைத் தாங்களே செய்து முடிப்பதுடன், அம்மா அப்பாவுக்கும் தங்களால் முடிந்த சிறிய உதவிகளைச் செய்யத் தொடங்கினர்.
நீதி: வீட்டு வேலை என்பது பெற்றோருக்கு மட்டுமே உரியதல்ல. குழந்தைகளும் தங்களால் முடிந்த சிறிய உதவிகளைச் செய்வதன் மூலம் பெற்றோரின் சுமையைக் குறைக்கலாம். ஒற்றுமையுடன் உதவி செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்! 🌸
இன்றைய செய்திகள்









No comments:
Post a Comment