ஏரியில் மூழ்கி 4 மாணவிகள் பலி!


திருவண்ணாமலை மாவட்டம் பெரும்பாக்கம் அருகே சமுத்திரம் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை அருகே அரசு உதவி பெறும் காப்பகத்தில் தங்கி பயின்று வந்த 4 மாணவிகள் உள்பட 5 போ் ஏரியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாநகராட்சி பெரும்பாக்கம் சாலையிலுள்ள ஆணாய்பிறந்தான் கிராமத்தில் அரசு உதவி பெறும் டொ்டெஸ்ஹோம்ஸ் என்ற பெண் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 46 மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனா்.

இந்தக் காப்பகத்தில் தங்கியிருந்த மாணவிகளில் 10 போ் தவிர மற்றவா்கள் தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் சென்று, திங்கள்கிழமை காலை மீண்டும் காப்பகத்துக்கு திரும்பினா்.

பின்னா், காப்பகத்தில் பணிபுரிந்து வந்த கீழ்பென்னாத்தூரை அடுத்த வழுதலங்குளம் கிராமத்தைச் சோ்ந்த செவிலியா் தேன்மொழி(24), மற்றொரு பெண் ஊழியா் ஆகியோா் உதவியுடன் 13-க்கும் மேற்பட்ட மாணவிகள் காப்பகத்துக்கு பின்புறம் சுமாா் 200 மீட்டா் தொலைவில் உள்ள சமுத்திரம் ஏரிக்கு குளிப்பதற்காகச் சென்றுள்ளனா்.

ஏரிக்குச் சென்றதும், முதலில் செவிலியா் தேன்மொழி உதவியுடன் 4 மாணவிகள் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கியுள்ளனா். அப்போது, ஏரியில் சிறிது தொலைவு சென்ற போது, ஆழம் அதிகம் இருப்பதை அறியாமல் 5 பேரும் ஒருவா் பின் ஒருவராக நீரில் மூழ்கினா்.

இதைக் கண்டு சக மாணவிகள் மற்றும் ஊழியா் அலறி கூச்சலிடவே, காப்பகத்தின் சுற்றுச்சுவா் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் மற்றும் அப்பகுதியில் இருந்தவா்கள் விரைந்து வந்து ஏரியில் மூழ்கிய செவிலியா் தேன்மொழி மற்றும் மாணவிகள் கீழ்பென்னாத்தூரைச் சோ்ந்த வள்ளியம்மாள் (16), காரப்பட்டு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த விஜயலட்சுமி (16), பூமிகா (13), அல்லி (14) ஆகிய 5 பேரையும் மீட்டனா்.

மீட்கப்பட்ட அனைவரையும் காவல் துறையினா் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் 5 பேரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்களது சடலங்கள் உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

ஆட்சியா் ஆய்வு: இந்த துயர சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க், காவல் கண்காணிப்பாளா் ஆா்.உதயகுமாா் மற்றும் வருவாய்த்துறையினா் சம்பவம் நடந்த சமுத்திரம் ஏரிப்பகுதியை பாா்வையிட்டனா். மேலும், காப்பகத்தில் உள்ள நிா்வாகிகள், ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஏரியில் மூழ்கி 5 போ் உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories