அரசு பள்ளியில் படிச்சியா? உனக்கு வெளிநாட்டில் PG படிக்க ₹36 லட்சம் தருது தமிழக அரசு! 50 பேருக்கு ஜாக்பாட் - கடைசி தேதி 31.12.2026!

அரசு பள்ளியில் படிச்சியா? உனக்கு வெளிநாட்டில் PG படிக்க ₹36 லட்சம் தருது தமிழக அரசு! 50 பேருக்கு ஜாக்பாட் - கடைசி தேதி 31.12.2026!

திட்டம் என்ன?

தமிழ்நாடு அரசு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்

"அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் பட்டப்படிப்பு பயில நிதியுதவி வழங்கும் திட்டம்"

(தமிழ்நாடு மாணவர்களுக்கு மட்டும்)

2026-2027 கல்வியாண்டுக்கு விண்ணப்பம் ஆரம்பம்!

முக்கிய தேதிகள்:

- விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: 2.11.2026

- விண்ணப்பப் பதிவு நிறைவடையும் நாள்: 31.12.2026

- அச்சுப் பிரதியை சமர்ப்பிக்க கடைசி நாள்: 31.12.2026

எப்படி விண்ணப்பிக்கணும்?

முதலில் இந்த Google Form-ல் பதிவு செய்யணும்: forms.gle/MABNLgy21rfcNC…

பதிவு செய்த பிறகு, அந்த விண்ணப்பத்தின் பிரிண்ட் அவுட் எடுத்து, இணைப்பு-II (Annexure II)-ல் உள்ள ஆவணங்களுடன் அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பணும்.

முழு விவரம்: dte.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

யார் விண்ணப்பிக்கலாம்? - 5 தகுதிகள்:

1. அரசுப் பள்ளி தகுதி:

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். அல்லது 6 முதல் 10 வரை அரசுப் பள்ளியில் படித்து, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

2. வெளிநாட்டு பல்கலை தகுதி:

QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் (QS World University Rankings) முதல் 500 இடங்களில் உள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில், பொறியியல் / கலை / அறிவியல் / மனிதவியல் துறையில் முழுநேர வளாக (Full-time, On-campus) முதுநிலைப் பட்டப்படிப்புக்கு (Master's Programme) நிபந்தனையற்ற (Unconditional) சேர்க்கை அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

3. மதிப்பெண் தகுதி:

இளங்கலைப் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான தரநிலையைப் பெற்றிருக்க வேண்டும்.

4. வருமான தகுதி:

குடும்பத்தின் ஆண்டு வருமானம் அனைத்து மூலங்களிலிருந்தும் ரூ.8.00 லட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும்.

5. வயது தகுதி:

01.08.2026 அன்று *30 வயதிற்கு மிகாமல்* இருக்க வேண்டும்.

எத்தனை பேருக்கு? எவ்வளவு பணம்?

- மொத்தம் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

- 25 பேர் - பொறியியல் பிரிவு

- 25 பேர் - கலை, அறிவியல் மற்றும் மனிதவியல் பிரிவு

- தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, திட்ட வழிகாட்டுதல்களின்படி, ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.36.00 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.

தொடர்பு முகவரி:

இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், 53, சர்தார் படேல் சாலை, கிண்டி, சென்னை - 600025.

("Application for PG Abroad" என உறையின் மீது குறிப்பிடப்பட வேண்டும்)

மின்னஞ்சல்: adpdote@tndote.com

இது சாதாரண திட்டம் இல்ல. அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவன் கூட ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு போன்ற உலக டாப் 500 பல்கலைக்கழகத்தில் படிக்க ₹36 லட்சம் அரசே கொடுக்கும் மெகா திட்டம். உன் நண்பர்கள் யாராவது அரசு பள்ளி மாணவராக இருந்து PG Abroad கனவில் இருந்தா உடனே இந்த லிங்கை அனுப்பு. கடைசி தேதி டிசம்பர் 31 தான்!
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories