
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
EDUCATION NEWS
» TET - ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்
TET - ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்
கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தின் சார்பில், மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்யப்பட்டு, அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. அச்சங்கத்தின் மாநில தலைவர் இளங்கோவன் கூறியதாவது: கடந்த 2012ம் ஆண்டு முதல் தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வைத்து பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
கடந்த, 14 ஆண்டுகளில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில், உரிய தகுதி பெறாத மற்றும் தேர்ச்சி பெறாத, 5000 பேர் ஆசிரியர்களாக தற்போது வரை கூடுதலாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நியமனங்களில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளன என்பதற்கான உரிய ஆவணங்களுடன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், எங்கள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2024ம் ஆண்டு டிச., 19ம் தேதி, தமிழக காவல் துறை தலைமை அதிகாரியை சந்தித்து, தீர்வு காண உத்தரவு பிறப்பித்தது.
அது குறித்த புகார், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றப்பட்டு, ஓராண்டாக கிடப்பில் இருந்தது. இப்போது, எங்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர். கடந்த காலங்களில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்த உரிய ஆவணங்களை, மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறையில் வழங்கியுள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரியமும், ஊழலும் பிரிக்க முடியாததாகவே நீண்ட காலமாக இருந்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக, எங்கள் வாழ்வாதாரத்தை சீரழித்த இந்த முறைகேடுகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடாக பணி நியமனம் பெற்றவர்களை வெளியேற்றி, தகுதியானவர்களை வைத்து, ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.









No comments:
Post a Comment