குரூப்-1 தேர்வு: நாளை இலவச பயிற்சி

குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான இலவச ஒரு நாள் பயிற்சி, சென்னை அண்ணாநகரில் சனிக்கிழமை (ஏப். 13) நடைபெற உள்ளது.
ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி சார்பில் நடைபெற உள்ள இந்த இலவச பயிற்சியில் குரூப்-1 முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் வழிமுறைகள் குறித்து பயிற்சியளிக்கப்படும்.இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் குரூப்-1 நேர்முகத் தேர்வுக்கான முழுமையான இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்நிலைத் தேர்வு நுழைவுச் சீட்டு ஆகியவற்றுடன், சென்னை அண்ணா நகரில் உள்ள நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தில் காலை 10 மணி அளவில் நேரில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு 9941937976, 7550151585.