Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 11, 2019

எளிமையாக மழைநீரை இப்படியும் சேமிக்கலாம் - புது ஐடியா !


மழைநீரை நிலத்தடியில் சேமிப்பது குறித்து எளிமையான முறையை மும்பையைச் சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
மும்பையில் தற்போது மழை பெய்து நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
கனமழையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். ஆனால், சென்னை நகரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.
நிலத்தடி நீர் வரலாறு காணாத அளவில் கீழே சென்றுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் பலரும் மேலும் பல அடிகள் ஆழமாக போர் போட்டு தண்ணீர் எடுக்க தொடங்கியுள்ளனர்.


தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மழைநீரை சேமிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்கள் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இத்தகைய நிலையில்தான், மும்பையைச் சேர்ந்த சுபஜித் முகர்ஜி என்பது மழைநீர் நிலத்தடி நீராக சேமிப்பதற்கான புதிய முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
அதற்கு கட்டிட வேலைகளுக்கு நீர் பிடித்து வைக்கும் ஒரு டிரம் மட்டுமே போதுமானது
இதுகுறித்து சுபஜித் கூறுகையில், 'அந்த டிரம்மை சுற்றிலும் துளைகள் போட வேண்டும். நிலத்தடி நீரை சேமிக்கும் பகுதியில் 3 அடி ஆழம் குழித் தோண்ட வேண்டும். துளைகள் போடப்பட்ட டிரம் உடன் மழைநீரை உள்ளே அனுப்பும் குழாயை இணைக்க வேண்டும்.
தோண்டப்பட்ட குழியில் டிரம்மை வைத்து சுற்றிலும் ஜல்லியை கொட்ட வேண்டும். ஜல்லி, சகதியை உள்ளே செல்லவிடாமல் தடுக்கும்' என்கிறார்.
இந்த எளிதான முறை மூலம் மழை நீரை நிலத்தடி நீராக சேமிக்கலாம்.


இந்த முறையை மும்பை நகர் முழுவதும் சுபஜித் கொண்டு சென்று வருகிறார். சமூக வலைத்தளங்கள் மூலம் தன்னுடைய புதிய முறையை எடுத்துக் கூறி வருகிறார்.
இந்த முறையை மும்பையில் உள்ள பல்வேறு வீடுகளில் கடைபிடிக்க தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக பள்ளிகளில் அதிக அளவில் இதுபோன்ற டிரம் நீர் சேகரிப்பு முறையை செய்து வருகின்றனர். '
ஒரு பள்ளிக்கு தரையை சுத்தம் செய்யவே மாதம் தோறும் 5000 லிட்டர் தண்ணீர் தேவை. மழை காலங்களில் நீங்கள் 5 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமித்தால் பயனுள்ளதாக இருக்கும்' என்கிறார் சுபஜித்