அரசுபள்ளியில் மரக்கன்று நடும்விழா

விழாவிற்கு, பள்ளி துணை முதல்வர் மேகலா தலைமை தாங்கி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அறிவியல் ஆசிரியர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். பின் அவர் பேசுகையில், மரம் வளர்ப்பதால் மழை பெறுவதோடு, மண் அறிப்பை தடுக்க முடியும்,

மேலும் உயிர்களின் வாழ்வதாரமாகவும், உயிர்களின் பண்முக பெருக்கத்திற்கும் மரம் ஒரு சூழ்நிலை மண்டலமாகவும் அமைகிறது என்றார்.நிகழ்ச்சியில் விரிவுரையாளர் அன்புமொழி, உடற்கல்வி ஆசிரியர் தலைமையில் பள்ளி மாணவர்கள் மா, பலா, பாதாம், வேம்பு, சவுண்டல் மரம், துாங்கு மூஞ்சி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தினர்.