Search This Blog

Thursday, September 5, 2019

பிளஸ் 2 பொது தேர்வுக்கு மாணவர் விபரம் சேகரிப்பு

0 comments
இதற்கான ஏற்பாடுகளை, தேர்வுத் துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாவட்ட அரசு மற்றும் தனியார் மேல்நிலை பள்ளிகளுக்கும், அரசு தேர்வுத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதும் வகையில், அவர்களின் விபரங்களை, பள்ளிகள் சேகரித்து, 11ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, அனுப்ப வேண்டும்.

முதன்மை கல்வி அதிகாரிகள், இந்த விபரங்களை சரிபார்த்து, அரசு தேர்வுத் துறை அலுவலகத்துக்கு, 13ம் தேதிக்குள், அனுப்ப வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில், பிளஸ் 1 படித்த அனைத்து மாணவர்களின் விபரங்களும், பிளஸ் 2 தேர்வுக்கான பட்டியலில், இடம் பெற வேண்டும். எந்த மாணவரின் பெயரும் விடுபடக் கூடாது. அவர்கள் வேறு பள்ளிக்கு மாறியிருந்தாலும், அவர்களின் விபரங்களை, புதிய பள்ளிகளில், இணைத்து வழங்க வேண்டும் என, அரசு தேர்வு துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment