Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 11, 2019

தமிழக ஆசிரியர்களுக்கு வெளிநாட்டு ஆசிரியா்கள் அளிக்கபோகும் சிறப்பு பயிற்சி..?

கல்வி கற்றுத்தரும் முறை பற்றி பயிற்சி அளிக்க பின்லாந்து ஆசிரியர்கள் தமிழகத்துக்கு வருகின்றனர் - கே.ஏ.செங்கோட்டையன் !!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டியில்,

பின்லாந்து நாட்டின் கல்வி முறைகளை பார்வையிட்டு, தமிழக பள்ளிக்கல்வித் துறை மூலமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை ஆய்வு செய்வதற்காக அந்த நாட்டுக்கு சென்றிருந்தோம்

.பின்லாந்து நாட்டின் மக்கள் தொகை 55 லட்சம்தான்.

அங்குள்ள பள்ளிகளை பின்லாந்து அரசே நடத்தி
வருகிறது.



பள்ளிக்கூட நடைமுறைகளின்படி பிரி கே.ஜி., எல்.கே.ஜி., யூ.கே.ஜி. என்ற வரிசையில் வகுப்பறைகள் உள்ளன.

அங்கிருந்தே வாழ்க்கைக்குத் தேவையான உடல் நலன், ஆரோக்கியம், வாழ்க்கை நடைமுறைகள், சுகாதாரம் கற்றுத் தரப்படுகிறது. மாணவனின் மனநிலைக்கு ஏற்ற கல்விகளை அளிக்கின்றனர்.

அங்கு6 வயதுக்குப் பிறகுதான் கல்வி கற்கத் தொடங்குகின்றனர்.

அதுவரை விளையாட்டுதான். 6 வயதுக்கு மேல்தான் வகுப்பறைகளில் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.

15-ம் வயதில் 9-ம் வகுப்புக்கு வரும்போது திறன் பயிற்சி அளிக்கின்றனர்.



பின்லாந்தில் எல்லா பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம்தான் உள்ளது.

அந்த நாட்டைப் பார்த்ததன் விளைவு என்னவென்றால், அங்கிருந்து தமிழகத்துக்கு 30 ஆசிரியர்களை வரவழைக்க இருக்கிறோம்.

அவர்கள் ஒரு மாதம் தங்கி இருந்து இங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை அளிப்பார்கள் ' என்று கூறினார்.

No comments:

Post a Comment